டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்.. இறுதி நிமிடம் குறித்து பேசிய எதிர்நீச்சல் நடிகர், மனமுடைந்த இயக்குனர்

190 0

மாரிமுத்து

எதிர்நீச்சல் வில்லன் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்..

இறுதி நிமிடம்

எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்துவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக டப்பிங் அறையில் இருந்து வெளிய வந்த மாரிமுத்து உடனடியாக தனது காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதன்பின் அவருடைய மகளை தொடர்பு கொண்டதன் பிறகு தான் விவரம் என்னவென்று தெரிந்தது என எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் தம்பியாக நடித்து வரும் நடிகர் கமலேஷ் கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் திருச்செல்வம் கூறுகையில் :

“நடிகர் மாரிமுத்து மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. நாங்கள் இன்று சீரியல் ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம். ஆனால் அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு வருவதாக கூறியிருந்தார்”.

“ஆனால் அதற்குள் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. இது எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகிற்கே இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவதென்று தெரியவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட ஜீரணிக்கலாம், ஆனால் அவர் நன்றாக இருந்தார்” என பேசியுள்ளார்.

சினிமாவிற்காக சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்த மாரிமுத்து தனது இறுதி நிமிடங்களை கூட சினிமாவிற்காகவே செலவளித்துள்ளார்.

Related Post

கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்

Posted by - August 17, 2023 0
ஹே ராம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹே ராம். இதில் கமல்ஹாசன், ஷாருக்கான், ஹேம மாலினி,…

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?..விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்

Posted by - August 5, 2023 0
கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறினார். அப்போதில் இருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார்…

மகுடத்தை சூடியது பொன்னியின் செல்வன்-2 ..

Posted by - April 29, 2023 0
கல்கியின் எழுத்தில் உருவான காவியம் பொன்னியின் செல்வன். இதை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *