தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

380 0

புதுடெல்லி:

சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன் காரணமாக இந்த வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்காமலே ஆன்லைன் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனிநபர் கடன்களை தாராளமாக வழங்கி வந்தது.

இதன் காரணமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் அதிக அளவில் கடன் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. தனிநபர்களை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு சிபில் அடிப்படையில் கடன் வேண்டுமா? என்று நச்சரிப்பதும்.கடன் மறு சீரமைப்பு செய்ய வசதி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த 50,000 கோடி: ரிசர்வ்  வங்கி அறிவிப்பு | Dinakaran விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு எவ்வித ஆவணமும் இன்றி உடனே கடன் கொடுக்கும் நிலையும் உள்ளது. இதனால் பல நன்மைகள் இருந்தாலும் பொருளாதார ரீதியில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் நிதி இழப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தனி நபர்களுக்கான கடன் வழங்குவதற்கு உரிய ரிஸ்க் வெயிட் 100 சதவீதம் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பற்ற முறையில் தனி நபர்களுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்படும் மேலும் கடன் வழங்குவதற்காக வங்கிகள் வைத்திருக்கும் இருப்பில் 12 லட்சம் கோடிரூபாய் வரை கட்டுப்படுத்தவும் இது ஏதுவாக அமையும்.

தற்போது வழக்கமாக 100 ரூபாயில் 9 ரூபாய் தனி நபர்களுக்கான கடன் வழங்குவதற்கான மூலதனமாக வைப்பு வைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மூலதன இருப்பு ரூ.11. 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதன் மூலம் வங்கிகள் தனி நபர்களுக்கு கடன் வழங்கும் திறனை கட்டுப்படுத்த எதுவாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ரிஸ்க் வெயிட் காரணமாக வீட்டு கடன், கல்வி கடன், நகை கடன், வாகன கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அது வழக்கம் போல வழங்கப்படும் என்றும் இந்த கடன்களுக்காக ரிஸ்க் வெயிட் 100 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் மட்டுமே கூடுதலாக 25 சதவீதம் அதிகரித்துள்ளதால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இனிமேல் பெர்சனல் லோன் என்று அழைக்கப்படும் தனிநபர் கடன்களை வழங்குவதில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனி நபர்கள் கடன் வழங்குவதற்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் தெரியவரும்.

இதன் காரணமாக தனிநபர் கடன்கள் வழங்குவது குறைக்கப்பட்டு மற்ற கடன் சேவைகள் கூடுதலாக கிடைக்க உரிய விதிமுறைகளை வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தீவிரமாக கண்காணிக்கும் படியும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக கிரெடிட் கார்டு வழங்குவதிலும் பல்வேறு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கடைபிடிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால் வருங்காலங்களில் கிரிடிட் கார்டு வழங்குவது மற்றும் அதில் உள்ள லிமிடேஜ் தொகை தொடர்பாகவும் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Post

திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி டெல்லி மாணவி கொலை

Posted by - July 29, 2023 0
டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர்…

பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Posted by - November 28, 2022 0
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி…

நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?

Posted by - February 25, 2026 0
சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான நல்லகண்ணு இன்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் மருத்துவ படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது. Communist…

406 வாழை மரங்களை வெட்டி சாய்த்த மின்வாரிய அதிகாரிகள்… அதிர்ச்சியில் விவசாயிகள்!

Posted by - August 8, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வாரப்பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவர் கடந்த 50 ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்துவருகிறார். வரும் ஓணம் பண்டிகைக்கு நல்ல விலை…

உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி கிலோ ரூ.250-க்கு விற்பனை

Posted by - July 8, 2023 0
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் 1…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *