கல்லீரலை வலுவாக்கும் விதை.. தலைமுடி வளர்ச்சி முதல் சரும நலன் வரை காக்கும் ஒரே விதை.. நாலஞ்சு போதும்

218 0

சென்னை:

பப்பாளி எந்த அளவுக்கு நமக்கு நன்மைகளை தருகிறதோ, அதைவிட அதிகமான நன்மைகளை தரக்கூடியதுதான், பப்பாளி விதைகள். கல்லீரலின் பாதுகாப்புக்கு இந்த பப்பாளி விதைகள் பேருதவி புரிகின்றன. பப்பாளி விதைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.. பழத்தை சாப்பிடும்போது, இந்த விதைகளை தூக்கி போட்டுவிடாமல், கழுவி காயவைத்து பவுடராக்கி எடுத்து கொண்டால், பல்வேறு வகைகளில், பல்வேறு உடல்நலம் சார்ந்த கோளாறுகளை தீர்க்க பயன்படுத்தலாம். குறிப்பாக, கால் ஸ்பூன் முதல் ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே இந்த விதைகளை பயன்படுத்த வேண்டும்.கல்லீரலை வலுவாக்கும் விதை.. தலைமுடி வளர்ச்சி முதல் சரும நலன் வரை காக்கும்  ஒரே விதை.. நாலஞ்சு போதும் | Do you know the excellent benefits of Papaya  Seeds and amazing uses ...

சத்துக்கள்:

இந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டானின்கள், சபோனின்கள் போன்ற ஏகப்பட்ட ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ளன. இவைகள் எல்லாம் சேர்ந்துதான், நச்சுக்களை கொன்று, நம்முடைய உடலில் நோய்கள் எதுவும் அண்டாமல் காக்கின்றன.. பப்பாளி விதையிலுள்ள மூலக்கூறுகள் பூஞ்சை, பாரசைட்டுகள், ஈஸ்ட் போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை.

எனவே, பெண்களுக்கு இந்த பப்பாளி விதைகள் வரப்பிரசாதம் எனலாம்.. மாதவிடாயை தூண்டவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை நீக்கவும் இந்த விதைகள் உதவுகின்றன.. பீட்டா கரோட்டின் இந்த விதையில் நிறைந்திருப்பதால், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் உற்பத்தியை சீராக்குகிறது.

பெண்கள்:

அடிவயிற்று பிரச்சனை, வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இப்படி வயிறு சம்மந்தப்பட்ட அத்தனை தொந்தரவுகளுக்கும் பப்பாளி தீர்வாக உள்ளது… அதனால்தான், பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும் என்பார்கள்.. இந்த விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம், மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கின்றன.. இதனால், உடல் பருமன் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது

பெரும்பாலும், கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாக உபயோகப்படுகிறது.. ஆனால், கல்லீரலில் உள்ள நச்சுக்களையும், கிருமிகளையும் அழிக்க, பப்பாளியைவிட, அதன் விதைகளே சிறந்தது.. கல்லீரல் சிரோசிஸ் போன்ற நோய்களை அண்டாதவாறு இந்த விதைகள் பணிபுரிகின்றன. கல்லீரலின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டுமானால், பப்பாளி விதைகளை பயன்படுத்தலாம்.

எப்படி சாப்பிடலாம்:

கல்லீரலை சுத்தம் செய்ய, பப்பாளி விதைகளை, சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நான்கைந்து விதைகளை நசுக்கி, எலுமிச்சம் பழம் சாறுடன் சேர்த்து சாப்பிடலாம்.. ஆனால், இந்த விதைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது கூடுதல் பலனை தரும். இந்த விதைகள், சரும பாதுகாப்புக்கும் நலன் தருபவை.. சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கக்கூடியது.. விதைகளில் சிறிது எடுத்து, பாலில் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் வறட்சி நீங்கும்.. சரும சுருக்கங்களும் நீங்கி, முதுமை தள்ளிப்போடப்பட்டுவிடும்.

இந்த விதைகள் தலைமுடி வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.. இந்த விதையை பவுடராக்கி, சிறிது தேனுடன் கலந்து தலையில் ஹேர்பேக் போல போட்டு வந்தால், தலைமுடி வலுவாகும்.

தவிர்க்கலாம்:

ஆனால், ஒரு ஸ்பூனுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இதனால், மலட்டுத்தன்மை ஏற்படும்.. அதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமாம். சர்க்கரை நோயாளிகளும், மூட்டு வலி பாதிப்பிருப்பவர்களும், டாக்டரின் ஆலோசனையை பெற்றே சாப்பிட வேண்டும்.

Related Post

அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!

Posted by - January 26, 2024 0
அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ! சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில்…

புதுவையில் 2 நாளில் ரூ.30 லட்சம் சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர். இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து…

அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில் அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை

Posted by - January 6, 2024 0
சென்னை: எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்து ஒன்று இருக்கிறதென்றால் அதுவும் இந்த அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அத்தனையும் மகத்துவம்..!! வெறும் புல்தானே என்று இதை நினைத்து…

‘டீ’ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி ; விஷமாக மாறிய காதல்… கம்பி என்ன வைத்த போலீஸ்

Posted by - March 4, 2025 0
காதலை கைவிட நினைத்த காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலி. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சட்டக்கல்லூரி…

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

Posted by - December 4, 2022 0
தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார். இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *