“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

284 0

சென்னை:

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில் பாதுகாப்பது தொடர்பான அம்சங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 15 ஆய்வுகளை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு சென்னையின் மூன்றாவது மாஸ்டர்பிளான் திருத்தம் செய்யப்பட உள்ளது. நகரின் நீர்நிலைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள வளர்ச்சியை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தலைமைச் செயலாளரின் கருத்துப்படி , திருத்தப்பட்ட மாஸ்டர்பிளானில் வெள்ளத் தடுப்பு திட்டங்கள், புயல் பாதுகாப்பு திட்டங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.சென்னை மாஸ்டர் பிளான் 3".. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே  கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு? | Chennai Masterplan 3.0 to see a huge revamp  after the flood and ...

மாஸ்டர் பிளான் என்றால் என்ன?:

மாஸ்டர் பிளான் என்பது சென்னைக்கான வளர்ச்சி திட்டம் ஆகும். அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னையில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டும். சென்னையை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த மாஸ்டர் பிளானில்தான் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். இந்த நிலையில்தான், 1,189 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் வரம்பை 1,189 சதுர கிலோ மீட்டரில் இருந்து 5,904 சதுர கி.மீ. ஆகி விரிவுபடுத்துவதற்கான உத்தரவை மாநில அரசு முன்பு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போதுள்ள 1,189 சதுர கி.மீ.க்கு மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு, திருமழிசை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மீஞ்சூர் மற்றும் திருவள்ளூர் போன்ற செயற்கைக்கோள் நகரங்கள்/வளர்ச்சி மையங்களுக்கு மாஸ்டர் பிளானுக்கு பதிலாக, ரிஜினல் வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன நோக்கம்?:

மூன்றாவது மாஸ்டர் பிளான் திட்டத்தில் பொருளாதாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் மற்றும் முதலீட்டு மண்டலங்களை அடையாளம் காண்பதில் CMDA கவனம் செலுத்துகிறது. வணிகத் துறைகளில் மட்டுமல்ல, பல்வேறு தொழில்களிலும் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மென்ட்ஸ் (IIHS) அமைப்புடன் ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளது.

சென்னை மாற்றம்:

சென்னைக்கு புதிய முகம் கொடுக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர் அடுக்கு கட்டிடங்கள் கட்ட அனுமதி, புதிய சாலைகள், போஸ்டர் ஒட்ட தடை, கூடுதல் பாலங்கள் என்று சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல பூங்காக்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன.

முக்கியமாக சென்னையின் பல்வேறு பீச்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்பட உள்ளன. இதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் சென்னையில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்கும் அல்லது மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல தெருக்களுக்கு ஜாதி ரீதியான பெயர்கள் உள்ளன.

வன்னியர் தெரு, ஜிஎன் செட்டி ரோடு என்று பிரபல சாலைகள் பல உள்ளன. இப்படி ஜாதி ரீதியான பெயர்கள் பல்வேறு தெருக்களின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் வளர்ந்த ஒரு நகரம்.. ஜாதி பெயரை சுமந்து நிற்பது என்பது சரியாக இருக்காது. ஒரு சாலை அனைவருக்கமானதாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. நவம்பர் மாதத்திற்குள் 15 ஆய்வுகளை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது.

Related Post

முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை

Posted by - November 30, 2023 0
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை,…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிப்போம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Posted by - June 25, 2024 0
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975ஆம் ஆண்டு இதே நாளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்தாக கூறியுள்ளார். அரசியலமைப்பை தூக்கியெறிந்து, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கிய…

சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை- மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்

Posted by - February 22, 2023 0
சென்னை அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்…

சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சி நிகழ்ச்சியால் உடன்பிறப்புகள் உஷ்ணம்!

Posted by - January 13, 2024 0
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *