முழங்கால் வலி இருக்கா? கற்பூரவள்ளி ஒன்னு போதுமே.. மூட்டு வலியை விரட்டியடிக்கும் 10 டிப்ஸ்கள் பாருங்க

245 0

சென்னை:

பாடாய் படுத்தும் முழங்கால் வலி, மூட்டுவலிக்கு எளிய முறையிலேயே நிவாரணம் தேடலாம்.. அந்தவகையில், வீட்டிலிருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே, தீர்வை காணலாம்.

முழங்கால் வலி, மூட்டுவலிகளுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. ஆனால், உடனடியாகவும், தற்காலிகமாகவும் வலிகளிலிருந்து விடுபட வேண்டுமானால், இந்த டிப்ஸ்களை முயற்சிக்கலாம்.. இது தற்காலிக தீர்வுதானே தவிர, வலி அதிகம் என்றால், டாக்டர் கண்டிப்பாக சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.முழங்கால் வலி இருக்கா? கற்பூரவள்ளி ஒன்னு போதுமே.. மூட்டு வலியை  விரட்டியடிக்கும் 10 டிப்ஸ்கள் பாருங்க | Do you know the Health Benefits of  Karpooravalli and Super tips ...

கால்சியம்:

சமையலில் நிறைய கால்சியம் நிறைந்த உணவினை சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் போதுமான அளவுக்கு இருந்தால், எலும்புகள் வலுப்படும்.. எந்த உணவிலும், பூண்டு நிறைய சேர்த்து சமைக்க வேண்டும்.. காரணம், இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பூண்டு, சிறந்த வலி நிவாரணியாகவும் திகழ்கிறது..

வலியை குறைப்பதில் பூண்டு சிறந்தது என்றால், வீக்கத்தை குறைப்பதில் வெந்தயம் சிறந்தததாகும்.. வெறும் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்து, இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், முழங்கால் வலிக்கும், முழங்கால் வீக்கத்துக்கும் தீர்வாக இருக்கும்.. அல்லது வெந்தயத்தை நீரில் ஊறவைத்து விழுதுபோல அரைத்து, வலியுள்ள இடத்தில் விழுதினை பூசினால், நிவாரணம் கிடைக்கும்.

வெந்தயம்:

அல்லது வெந்தயத்தை பொடி செய்து, உணவு சாப்பிட்டதும், காலை, மாலை என 2 வேளை அரை ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல, இஞ்சியை பெரும்பாலும் தவிர்க்காமல் சேர்த்து கொள்ள வேண்டும்.. சமையலில் இல்லாவிட்டாலும், இஞ்சி டீ தனியாக தயாரித்து குடித்தால் முழங்காலுக்கும், மூட்டு வாதத்துக்கும் மிகவும் நல்லது.. அதேபோல, கீல்வாதத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் துளசியும், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.. எனவே, வெறும் வயிற்றில் நாலஞ்சு துளசியை மென்று தின்னலாம் அல்லது துளசி இலையில் டீ தயாரித்து குடித்தால், மூட்டுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்..முழங்கால் வலி இருக்கா? கற்பூரவள்ளி ஒன்னு போதுமே.. மூட்டு வலியை  விரட்டியடிக்கும் 10 டிப்ஸ்கள் பாருங்க | Do you know the Health Benefits of  Karpooravalli and Super tips ...

பப்பாளி விதைகள்:

அதேபோல, பப்பாளி விதைகளிலும் டீ போட்டு குடிக்கலாம்.. சிறிது பப்பாளி விதைகளை, தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து, அதில் டீ தூள் கலந்து கொதிக்க வைத்து இறக்கி, தேன், மிளகுதூள் சேர்த்து குடித்து வரலாம்.. முழங்கால் வலிக்கு இதுவும் நிவாரணம் தரும்.

சல்ஃபர் அதிகமாக உள்ள வெங்காயம், வலிகளை குறைக்கும் தன்மை கொண்டது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதுடன், வீக்கம், கட்டிகளுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது இந்த வெங்காயம். தயிர் கால்சியத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உங்கள் எலும்புகளை வலுவடையச் செய்து, உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். கேரட்டை கட்டாயம் சாப்பிட வேண்டும்..

அன்னாசிப்பழம்:

பழங்களில் அன்னாசிப்பழத்தை உரித்து சாப்பிடலாம். எலுமிச்சம் சாறு கலந்து கேரட் ஜூஸ் குடிக்கலாம். பருப்புக்கீரையை சூப் வைத்து குடிக்கலாம். பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிடலாம்.. பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், பீன்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளது.

எண்ணெய் வகைகள்:

பொதுவாக, எண்ணெய் வகைகள் இதுபோன்ற மூட்டு வலி பிரச்சனைக்கு உதவுகின்றன.. அந்தவகையில், ஆலிவ் எண்ணெய் வைத்து, முழங்கால் வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்யலாம்… காரணம், இந்த எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு கலவைகள் நிறைய உள்ளன.. அதனால், இந்த ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, வலியுள்ள முழங்காலில் சில நிமிடங்கள் மசாஜ் செய்தால், வலி மெல்ல குறைய துவங்கும்.

ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் வைத்து, வலியுள்ள இடத்தில் 20 நிமிடங்களுக்கு ஒத்தடம் தரலாம்.. 20 நிமிடங்களுக்கு மேல் இதை செய்தால், தோலில் பாதிப்புகள் ஏற்படுமாம்.. எனவே, தினமும் 2 வேளை மட்டுமே செய்துவரும்போது, பலன் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்:

அதேபோல, கற்பூரவள்ளியில், எண்ணெய் காய்ச்சி தயாரித்து பயன்டுத்தலாம்.. ஒரு பாத்திரத்தில், கடுகு எண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, கிராம்பு, வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய கற்பூரவள்ளி இலையையும் சேர்த்து வதக்க வேண்டும்.. சாறு எண்ணெய்யில் இறங்கியதும், அந்த எண்ணைய்யை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணைய்யில் காயமுள்ள இடத்தில், மசாஜ் செய்து வந்தால், முழங்கால் வலி குறைய துவங்கும்..!!

Related Post

தமிழ்நாட்டில் 5 நாட்கள் தொடர் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

Posted by - November 29, 2023 0
டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்… தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்…

”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு

Posted by - December 7, 2024 0
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி” தான் விஜய் என திமுக அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். Minister SekarBabu: வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…

புத்தாண்டு கொண்டாட்டமாக சேனல்கள் களமிறக்கும் புது படங்கள்.. கில்லி போல் தட்டி தூக்கிய விஜய் டிவி

Posted by - December 31, 2024 0
விழாக்காலம் என்றாலே கொண்டாட்டத்தோடு சேர்த்து டிவி சேனல்களில் என்ன புது படம் போடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து விடும். இதை நிஜமாகவே அதிக சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக்…

வீட்டிற்கு வராத கதிர் ஆனந்த்.. லாக்கரை உடைக்க கடப்பாறை; வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

Posted by - January 4, 2025 0
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக…

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - October 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *