சற்றுமுன் வந்த மழை அலர்ட்.. 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் சம்பவம்! பறந்து வந்த வானிலை அறிவிப்பு

186 0

சென்னை:

அடுத்த 3 மணி நேரம் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான வானிலை அறிக்கையில், “இன்று மதியம் 1 மணிக்குள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். சாலைகள் வழுக்கும் தன்மையும் இருக்கும். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். பழுதான கட்டிடங்கள் சேதம் ஆடைவதற்கான வாய்ப்பு உள்ளது.” என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.சற்றுமுன் வந்த மழை அலர்ட்.. 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் சம்பவம்! பறந்து  வந்த வானிலை அறிவிப்பு | Chennai met announced rain in 6 districts of  Tamilnadu till 1 pm ...

முன்னதாக வெளியான அறிவிப்பில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.

20.12.2023 மற்றும் 21.12.2023 : தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.12.2023 முதல் 25.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருச்செந்தூர் (தூத்துக்குடி) 23, காயல்பட்டினம் (தூத்துக்குடி) 21, நாலுமுக்கு (திருநெல்வேலி) 19, காக்காச்சி (திருநெல்வேலி) 18, மாஞ்சோலை (திருநெல்வேலி) 17, ஊத்து (திருநெல்வேலி) 15, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 13, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 12, பாபநாசம் (திருநெல்வேலி) 11, கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) 9, மணிமுத்தாறு (திருநெல்வேலி) 8, சேர்வலாறு அணை (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி) தலா 6, சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 5, கமுதி (ராமநாதபுரம்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி),

அருப்புக்கோட்டை (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), திருநெல்வேலி (திருநெல்வேலி), காரியாப்பட்டி (விருதுநகர்), கல்லிக்குடி (மதுரை) தலா4, கடனா அணை (தென்காசி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), திருமங்கலம் (மதுரை), மண்டபம் (ராமநாதபுரம்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), திருச்சுழி (விருதுநகர்), குப்பணம்பட்டி (மதுரை), சாத்தூர் (விருதுநகர்) தலா 3, பேரையூர் (மதுரை), தொண்டி (ராமநாதபுரம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), சண்முகாநதி (தேனி), விருதுநகர் (விருதுநகர்), நாங்குனேரி (திருநெல்வேலி), பரமக்குடி (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), வட்டானம் (ராமநாதபுரம்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), சோத்துப்பாறை (தேனி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), சங்கரன்கோயில் (தென்காசி), இளையாங்குடி (சிவகங்கை), மிமிசல் (புதுக்கோட்டை), விரகனூர் அணை (மதுரை), எழுமலை (மதுரை), திருப்புவனம் (சிவகங்கை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 2, கடலாடி (ராமநாதபுரம்), சிவகாசி (விருதுநகர்), நிலக்கோட்டை (சென்னை),

ராதாபுரம் (திருநெல்வேலி), பழனி (திண்டுக்கல்), விருதுநகர் AWS (விருதுநகர்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), ஆண்டிபட்டி (மதுரை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), பெரியகுளம் (தேனி), மானாமதுரை (சிவகங்கை), குண்டாறு அணை (தென்காசி), திருவாடானை (ராமநாதபுரம்), மணமேல்குடி (புதுக்கோட்டை), வைகை அணை (தேனி), மஞ்சளாறு (தேனி), ஆண்டிபட்டி (தேனி), மதுரை நகரம் (மதுரை), குன்னூர் PTO (நீலகிரி), மதுரை விமானநிலையம் (மதுரை), தேக்கடி (தேனி), குந்தா பாலம் (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), தேவகோட்டை (சிவகங்கை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), அரண்மனைப்புதூர் (தேனி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), போடிநாயக்கனூர் (தேனி) தலா 1.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Post

திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளது : பிரதமர் மோடி

Posted by - April 10, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும்,…

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 22, 2024 0
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு…

திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்.. புதிய வீடியோவால் பரபரப்பு..!

Posted by - October 21, 2024 0
குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் பகிர்ந்திருந்தார். யூடியூபர் இர்பானுக்கு குழந்தை பிறந்த வீடியோவை வெளியிட்ட நிலையில்,…

“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

Posted by - January 10, 2025 0
திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *