முருங்கை மரம்.. வேர் முதல் காய் வரை கொட்டிக்கிடக்கும் அதிசயம்.. ஆச்சரிய குச்சிகளும், அதிசய பூக்களும்

165 0

சென்னை:

முருங்கை என்றாலே பெண்களுக்கு அருமருந்தாகக்கூடிய கீரையாகும்.. முருங்கை ஈர்க்குகள் பெண்களுக்கு எப்படி உதவுகிறது தெரியுமா? முருங்கை விதைகளை வைத்து என்ன செய்யலாம்?

பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே பல பிரச்சனைகள் வந்துசேரும்.. முருங்கைக்கீரையில், இலை, பட்டை, பூ, வேர் போலவே, மிகவும் உபயோகத்துக்கு உரியது முருங்கை ஈர்க்கு ஆகும்.. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன..

மெனோபாஸ்:

பெண்களுக்கு மேனோபாஸ் பிரச்சனையின்போது, மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு இப்படி பல உபாதைகள் ஏற்படும்.. அவர்கள் இந்த முருங்கை ஈர்க்குச்சியை உணவில் சேர்த்துக் கொண்டால், உபாதைகள் தீரும்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும்.முருங்கை கீரையை வீட்டின் முன்பு வளர்க்கக்கூடாது ஏன்? உண்மை காரணம் இதோ -  மனிதன்

இந்த குச்சிகளை வைத்து ரசம் செய்யலாம். சூப் போல செய்யலாம்.. கசாயம் போல செய்து குடிக்கலாம். முருங்கை குச்சிகளை, தண்ணீரில் போடு கொதிக்கவைத்து வாய் கொப்பளித்தாலே, வாய்ப்புண்கள் ஆறுவதுடன், ஈறுகளில் உள்ள தொற்றுக்களும் நீங்கிவிடும்.

இரும்பு சத்து:

முருங்கைக்கீரையில் உள்ள குச்சிகளைதான் ஈர்க்கு என்று சொல்வார்கள். இந்த குச்சிகளிலும், ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.. முக்கியமாக கால்சியம் நிறைய உள்ளது.. இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது.

இவை இரண்டுமே, 40., 45 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மேனோபாஸ் சமயத்தில் கட்டாயம் தேவைப்படும் சத்துக்களாகும். இதுபோன்ற நேரங்களில் மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுவதால், ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது.. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முருங்கை ஈர்க்குச்சி வைத்து சூப் அல்லது கஷாயம் செய்து சாப்பிட்டாலே போதும்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும்… அளவுக்கு அதிகமான அசதியும் நீங்கும்.

இந்த கஷாயம் எப்படி செய்வது:

முருங்கை குச்சிகளை கழுவி சுத்தம் செய்து, அதை இடித்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இடித்த ஈர்க்குச்சிகளை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, மிளகு, சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.. அடுப்பில் ஒரு வாணல் வைத்து, எண்ணெய், கடுகு, கறிவேப்பில்லை, பெருங்காயம் தாளித்து, கொட்டினால் சூப் ரெடி.

அதேபோல, இவைகளை பயன்படுத்தி கஷாயம் செய்யலாம்.. முருங்கை ஈர்க்கு , வேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு , கறிவேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்திக்கொள்ளவும்.

வயிறு இரைச்சல்:

ஒரு பாத்திரத்தில் அனைத்து ஈர்க்குகளையும் சேர்த்து, இவைகளுடன் வசம்பு சேர்த்து நன்கு கருக்க வேண்டும். பிறகு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வைத்து, சுண்ட காய்ச்சி இறக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், வயிறு சம்பந்தமான பிரச்சனை தீரும். வயிற்று இரைச்சல் , வயிற்றுப்பொருமல், ஜீரணக் குறைபாடுகள் நீங்கும்..

அதேபோல, பருப்பு வேகவைத்து எடுத்து, அதில் ஈர்க்குச்சிகளை கழுவி சேர்த்து சாம்பார் செய்யலாம். அதேபோல, கூட்டு செய்யலாம்.. பருப்பு வேக வைத்து எடுத்து கொண்டு, ஒரு வாணலில் எண்ணெய், தக்காளி, வெங்காயம் தாளித்து, முருங்கை குச்சிகளை சேர்த்து கொட்டி வதக்கிவிட வேண்டும். இதில், பருப்பை கொட்டி வேகவைத்து இறக்கினால் கூட்டு ரெடி.

மாதவிடாய்:

கறிவேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு இரண்டையும் சேர்த்து ரசம் போல வைக்கலாம்.. இவை இரண்டுமே ரத்தவிருத்திக்கு உதவக்கூடியவை.. இவை இரண்டையும் வைத்து துவையல் போலவும் செய்யலாம். மாதவிடாய் நேரத்தில், இந்த துவையல் மிகவும் பெண்களுக்கு கைகொடுக்கும். சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், ஜீரண கோளாறுகளும் நீங்கும்.. அதேபோல, முருங்கைக்காயிலுள்ள விதைகளை வைத்தும் சூப் செய்து சாப்பிடலாம்.. முருங்கைக்காய்களை வேகவைத்து, அதிலுள்ள விழுதுகளை வழித்து எடுத்து, சூப் செய்தால், ருசியாக இருக்கும்.

கீரை சூப்:

முருங்கை கீரையை சூப்பாக சாப்பிட்டாலும், பெண்களுக்கு உள்ள உடல்நலக்கோளாறுகள் நங்கும்.. இதற்கு ஒரு கைப்பிடி முருங்கை கீரையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 4 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, நான்கைந்து சின்ன வெங்காயம், சிறிய தக்காளி, மஞ்சள் துாள் என அனைத்தையும், தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்து விட்டு, மற்றவைகளை மிக்சியில் அரைத்து, வடிகட்டிய தண்ணீருடன் கலந்துவிட வேண்டும்.. இப்போது ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், கருவேப்பிலை தாளித்து கொட்டி, மிளகு தூள் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகச்சிறந்த சூப்பாக இது அமையும்.

Related Post

திமுக, அதிமுகவை விட அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தவெக! மணி வார்த்தை பொய் ஆகுமா?

Posted by - October 7, 2024 0
திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில்  தளபதி விஜயின் வருகை…

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

Posted by - June 30, 2025 0
மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி…

சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததது ஏன்? – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

Posted by - March 17, 2025 0
சட்டப்பேரவை தலைவர் திமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், நடுநிலை தவறிவிட்டதாகவும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். “அதிமுகவில்…

கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?

Posted by - June 7, 2025 0
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அது என்ன தெரியுமா.? நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *