நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான்

323 0

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர் கதையாகிவிட்டது.

அந்த வகையில், மக்களாட்சி பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ் மொழி காக்கவும், தமிழ் மண்ணின் வளங்களைக் காக்கவும், வருங்கால தமிழிளம் தலைமுறை நலத்திற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்.

அச்சுறுத்தும் நோக்கத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு தனது கைப்பாவையான தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது.

மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் போக்கினைக் கண்டித்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

Related Post

ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி – சட்டபேரவையில் என்ன பிரச்னை?

Posted by - January 20, 2026 0
 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர். என் ரவி வெளிநடப்பு செய்தார். TN Assembly 2026: தமிழ்நாடு சட்டமன்றத்தில்…

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’

Posted by - February 19, 2026 0
’அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நேரத்தில், கடைசி நேரத்தில் களத்தில் குதித்த திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்காக கூட்டணி கணக்கையே மாற்றியிருக்கின்றனர்’ எந்த…

விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? – எடப்பாடி பேச்சு

Posted by - July 22, 2025 0
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய விஜயின் தவெக மற்றும் சீமான் ஆகியோருக்கு, எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தொண்டர்களை குஷிப்படுத்த ஆட்சியில் பங்கு என, பாஜகவினர் பேசி…

திமுகவுக்கு ஆதரவு… ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு! ஷாக்காகி பார்த்த விஜய்

Posted by - November 6, 2025 0
நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *