பல ஆண்களுடன் தொடர்பு.. மருமகன் உதவியுடன் மகளை கொன்ற தாய் – 3 மாதத்துக்கு பின் சிக்கியது எப்படி?

192 0

சென்னை காசிமேடு பெண் கொலையை தற்கொலை என நாடகமாடிய குடும்பத்தினர் போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் பாலகிருஷ்ணா நகரில்  வசித்து வருபவர்  செல்வம். இவருக்கு சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெண்ணின் தாயான ரெஜினா, தந்தை செல்வகுமார் என அனைவரும் ஒன்றாக ஓரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி அன்று குடும்பதகராறு காரணமாக சுமித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பெண்ணின் கணவன், பெற்றோர் என மூவரும் கூறியுள்ளனர். சுமித்ராவின் உடல்  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்கொலை வழக்காக பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனையடுத்து பெண்ணின் தாய், தந்தை, கணவரிடம் காசி மேடு போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணைகளை மேற்கொண்டார்.அருகாமையில் வசித்திருப்பவர்களிடம் தாய் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கணவர் தனது நண்பர்களிடம் பூச்சு மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். மேலும்  சுமித்ராவின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில் அகால மரணம் என்பதற்கு பதிலாக இயற்கை எய்தினார் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.மேலும் அரசு ஸ்டான்லி மருத்துவர் ஜனனியின் உடற்கூராய்வு முடிவில் ஆய்வாளரின் 20 கேள்விகளுக்கும் இது கொலை என உறுதிபடுத்தவே ஆய்வாளர் விசாரணையை தீவிரபடுத்தினார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை -தாய்

காவல்துறையினர் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மகளை கழுத்தை நெறிந்து கொன்றதாக அவரது தாய் ஒப்புக்கொண்டார். அவர் போலீஸாரிடம் கூறிய தகவலில், “ என் மகளுக்கு பல ஆண்களோடு தகாத உறவு இருந்தது. இதனை நான் தட்டிக்கேட்டேன் இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது என் மகள் பூஜை அறையில் இருந்த மணியை கொண்டு என்னை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த நான் திரும்பி கழுத்தை நெறித்தேன் அப்போது என் கணவர் கால்களையும் எனது மருமகன் கையை இறுக்க பிடித்துக்கொண்டனர். மூவரும் சேர்ந்து மகளை கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மூவரும் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். ஆய்வாளரின் 20 கேள்விகளிலேயும் உடற்கூறாய்வில் அரசு மருத்துவரின் அறிக்கையிலும் மூவரும் சிக்கியுள்ளனர். பலருடன் தகாத உறவில் இருந்ததை பலமுறை கூறியும்  மகள் கேட்காததால் கட்டிய கணவனின் உதவியாடு

கொலை செய்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை: திருட்டு பெண் படம் அனுப்பி போலீசார் தேடுதல் வேட்டை- கை, கால்களை உடையுங்கள் என ஆடியோ

Posted by - August 14, 2023 0
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி செங்கம் மேலப்பாளையம் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து பெண் ஒருவர் காரில் வந்து…

திடீரென விற்கப்படும் விஜய் டிவி- போட்டிபோடும் TV நிறுவனம்…

Posted by - August 2, 2023 0
விஜய் டிவி தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய். ஸ்டார் குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது, அதன்பின் அதை உலக அளவில்…

கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! வானிலை மையம் தகவல்

Posted by - September 9, 2025 0
மயிலாடுதுறை தொடங்கி தேனி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக இருக்கிறது.…

தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

Posted by - December 18, 2023 0
வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்…

மாசி மகத்தன்று கும்பகோணம் ‘மகாமகம்’ குளத்தில் நீராடினால்… உண்மையில் நம் பாவங்கள் நீங்குமா?

Posted by - February 24, 2023 0
கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம். புராணங்களில் பல விஷயங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *