புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சிறுமியின் பெற்றோருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்..!!

228 0

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சோலை நகரில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி கடந்த 4 நாட்கள் முன்பு காணாமல் போன நிலையில் கால்வாயில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் இருவரை பிடித்து விசாரித்தபோது அந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அவர் உயிரிழந்துவிட்டதால் சாக்கு பையில் கட்டி கால்வாயில் வீசி சென்றதாக அந்த காமக்கொடூரர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பள்ளி கல்வி பயிலும் அந்த சிறுமியை ஈவிரக்கமின்றி கொலைசெய்த அந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

விஜய்க்கு போன் போட்ட அஜித்.. ஆடிப் போன வெற்றி கழகம்

Posted by - August 27, 2024 0
விஜய் இடம் போனில் பேசிய அஜித் மேலும் உங்களின் அடுத்தடுத்த நகர்வை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதோடு 2026 தேர்தலில் வெற்றி உங்களுக்கு தான் என்று…

சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

Posted by - December 26, 2025 0
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில்…

பல்வேறு இடங்களில் கைவரிசை- காதலனுடன் ஜாலியாக இருக்க கொள்ளையடித்த இளம் பெண்

Posted by - August 15, 2023 0
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன்.விரதம் மனைவி கோமதி. இவர்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.…

கோடை வெயில் தொடங்கும் முன்பே குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டன

Posted by - February 20, 2023 0
தென்காசி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.…

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *