கட்சிக்கு செல்போன் செயலி.. வீடியோவில் வந்து கோரிக்கை வைத்த நடிகர் விஜய்!

197 0

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று மாலை அறிமுகப்படுத்தினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி இந்த வாரம் அறிமுகம் செய்ய கட்சி தலைமை திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் இதற்கான ஆலோசனையும் நடைபெற்று வந்தது. மேலும் இதற்கான செயலி மற்றும் பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று மாலை அறிமுகப்படுத்தினார். மேலும், மே மாதத்திற்குள் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

2018ல் அரசியல் எண்ட்ரி.. 2022ல் அமைச்சர்.. உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணம்!

Posted by - December 13, 2022 0
Udhayanidhi : அண்மையில், திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு சிறப்பு திட்ட…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

‘காங்கிரஸ் – த.வெ.க கூட்டணிக்கு அச்சாரம்’ ராகுலை சந்திக்கும் விஜய்..?

Posted by - July 21, 2025 0
’விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜயின் முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கட்சி, அந்த கட்சியோடுதான்…

தவெக மாநாடு ஏற்பாட்டில் ஒப்பந்ததாரர் கைவிரிப்பு: அரசியல் அழுத்தமே காரணம்!

Posted by - August 20, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக ஒப்பந்ததாரர்கள் தீடிரென கைவிரித்தனர். இதனால், கேரளாவில் இருந்து இருக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தவெக 2- ஆவது…

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?

Posted by - December 9, 2024 0
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக, விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். கட்சியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *