வேண்டிய வரங்களைத் தரும் குலதெய்வ விரத வழிபாடு

253 0

குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும்.

ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுக்கு உரிய தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக ஒருவரது குல தெய்வமே குறிப்பிடப்படுகிறது. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுவது ஐதீகம். தனது அருளை குலதெய்வம் அளிப்பதுடன், மற்ற தெய்வ வழிபாடுகளுக்கான பலன்களையும் அளிப்பது ஒருவரது குல தெய்வம்தான் என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை என்றும் சொல்லப்படுகின்றன. குல தெய்வங்கள் இல்லாத குடும்பத்தினர் எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டு, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், முற்றிலும் நிவர்த்தி செய்ய இயலாது என்ற ஆன்மிக சூட்சுமத்தை சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒவ்வொருவருக்கும் இரண்டு விதமான பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருக்கின்றன. அவை, முன்னோர் செய்த பாவ, புண்ணியங்களால் வரும் நன்மை, தீமைகள் மற்றும் அவரவர் வாழ்கையில் செய்துள்ள பாவ, புண்ணியங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவையாகும். பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Post

பல ஆண்களுடன் தொடர்பு.. மருமகன் உதவியுடன் மகளை கொன்ற தாய் – 3 மாதத்துக்கு பின் சிக்கியது எப்படி?

Posted by - December 1, 2022 0
சென்னை காசிமேடு பெண் கொலையை தற்கொலை என நாடகமாடிய குடும்பத்தினர் போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை நாகூரான்…

உடல், மனம் இரண்டும் சமநிலையை அடைய உதவும் பார்சுவ பகாசனம்

Posted by - March 2, 2023 0
வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள்.…

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அவங்க உடலில் என்ன நடக்குமாம் தெரியுமா?

Posted by - December 26, 2023 0
பிஸ்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். கூடுதலாக, எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் இது ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள…

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…

வலுவிழந்த மாண்டஸ் புயல்… கரையை கடக்கும் போது சீறுமா..?

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து உள்ளது. மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *