கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

194 0

தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல்துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, இன்று, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், வெளிவந்த செய்திகள், பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை?

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், மூன்று ஆண்டுகளாகக் கோட்டை விட்டது போல, கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது என அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் ‘உதயநிதி வழங்கும்’ என்ற வாசகத்தை நீக்க அறிவுறுத்தல்!

Posted by - December 19, 2022 0
தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள திரையரங்க வாசலில் 3…

முதலில் வந்தது கோழியா…? முட்டையா..? பல ஆண்டு கால புதிருக்கு விடை தேடி கொடுத்த விஞ்ஞானிகள்

Posted by - June 16, 2023 0
உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா… சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது. சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான…

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *