கடந்த 18 மாதங்களாக எனக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை அமைதியாக சொல்லி கொண்டு வந்தேன். 2025 டிசம்பர் மாதமே நான் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்து அவர்களை தயார்படுத்தி விட்டேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு காவல்துறையில் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். மிக குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2025ம் ஆண்டு பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். அதன்பிறகு அண்ணாமலையை பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் கட்சி தலைமைக்கும், அண்ணாமலைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதோடு கட்சி தொடங்குவதாகவும் அறிவித்துள்ளார். சமூக வலைத்தள நேரலையில் தோன்றி பேசிய அண்ணாமலை
கடந்த 18 மாதங்களாக எனக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை அமைதியாக சொல்லி கொண்டு வந்தேன். 2025 டிசம்பர் மாதமே நான் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்து அவர்களை தயார்படுத்தி விட்டேன். என்னுடைய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் அடுத்து நடைபெறும் பொதுத்தேர்தலில் பங்குபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா தரப்பட்ட மனிதர்களையும் உள்ளே கொண்டு வந்து, அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்து முன்னிறுத்த வேண்டும். பிம்ப அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும்.
ஒரு முதலமைச்சர், 35 அமைச்சர்கள், 234 எம்.எல்.ஏ.,க்கள், 39 எம்.பி.,க்கள் ஆகியோர் தமிழ்நாட்டை மாற்ற முடியாது. உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள் மூலம் சுத்தமான தமிழ்நாட்டை கொண்டு வர முடியும். இப்போதைக்கு நாம் தொடங்கும் இயக்கம் விரைவில் கட்சியாக மாறும். அப்போது நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். தலைவரான நான் தொடங்கி கட்சியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் விதிமுறைகள் உண்டு.
https://wetheleader.org/ என்ற இணையதளம் வாயிலாக இணையுங்கள். நாம் அரசியலில் வருபவர்களை தேர்தலில் நிற்க தயாராகும் வகையில் அவர்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெறும். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. ஆளும் கட்சி இருக்கிறது, நிறைய எதிர்க்கட்சிகளும் இருக்கிறது. எல்லாரும் அவர்கள் கொள்கையை சொல்லட்டும். நாமும் வரும் காலத்தில் நம்முடைய கொள்கையை சொல்வோம். விரைவில் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் வரை பொறுமையாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.
, “பாஜகவைப் பொறுத்தவரை இந்த 6 ஆண்டு காலத்தில் எப்போதும் ஒரு விஷயத்தை தமிழ்நாட்டின் அடையாளம், மண், கலாச்சாரத்தை நான் விட்டுக்கொடுத்தது கிடையாது. நான் எப்போதும் பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமிக்க தமிழன் என சொல்வேன். அப்படித்தான் நான் ஆரம்பிக்ககூடிய இயக்கத்தில் இருக்கப் போகிறேன். நான் பாஜகவில் இணைந்தபோது அத்தனை தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். பாஜக தமிழர் அடையாளத்தோடு களத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன்.