seeman

அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக களமிறங்குகிறாரா சீமான்?

62 0

சென்னை: இடைத்​தேர்​தலில் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் தவெகவை எதிர்​கொள்ள, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை எதிர்க்​கட்​சிகளின் பொது​வேட்​பாள​ராக களம் இறக்க திமுக திட்​ட​மிட்டு வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

சட்​டப்​பேரவை தேர்​தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்​சி, அனைத்து இடங்​களி​லும் தோல்​வியைச் சந்​தித்​ததுடன் அதன் வாக்கு வங்​கி​யும் 8 சதவீதத்​திலிருந்து 4 சதவீத​மாகக் குறைந்​தது. காரைக்​குடி​யில் போட்​டி​யிட்ட அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் டெபாசிட் இழந்து நான்​காம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்.

இந்நிலையில், இரு தொகு​தி​களில் வென்ற முதல்​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். இதனால் திருச்சி கிழக்​கு, பெருந்​துறை, தாராபுரம், மது​ராந்​தகம், அம்​பாச​முத்​திரம், விராலிமலை ஆகிய 6 தொகு​தி​களுக்கு தற்​போது இடைத்​தேர்​தல் அறிவிக்​கப்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

இந்த இடைத்​தேர்​தலில் தவெக கூட்​ட​ணியை வீழ்த்​தியே தீர வேண்​டும் என்ற முனைப்​பில் இருக்​கும் திமுக, ஆளுங்​கட்​சிக்கு எதி​ராக அனைத்து எதிர்க்​கட்​சிகளை​யும் ஒன்​றிணைத்து பொது வேட்​பாளர்​களை நிறுத்த ஆலோ​சித்து வரு​கிறது.

இதன் முதல்​கட்​ட​மாக நெல்லை மாவட்​டத்​தின் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் பணி​களை தொடங்​கி​யுள்​ளது. கடந்த தேர்​தலில் அம்​பாச​முத்​திரத்​தில் அதி​முக சார்​பில் வென்ற இசக்கி சுப்​பை​யா, இரண்​டாம் இடம் பிடித்த காங்​கிரஸ் வேட்​பாளர் மற்​றும் மூன்​றாம் இடம்​பிடித்த தவெக வேட்​பாளர் என மூவருமே தற்​போது தவெக அணி​யில் உள்​ளனர்.

மேலும், இத்​தொகு​தி​யில் நாடார் சமூகத்​தினர் கணிச​மாக வசிப்​ப​தைக் கணக்​கில் கொண்​டு, அதே சமூகத்​தைச் சேர்ந்த சீமானை பொது​வேட்​பாள​ராக நிறுத்த திமுக காய் நகர்த்தி வரு​கிறது. சீமானை சம்​ம​திக்க வைக்​கும் பொறுப்பு முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யிட​மும் திரைமறைவு பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் கசிந்​துள்​ளன.

அம்​பாச​முத்​திரத்​தில் சீமானை வெற்றி பெறச்​செய்து சட்​டப்​பேர​வைக்​குள் அனுப்​பி​னால், அது முதல்​வர் விஜய்க்​கும், தவெக​வுக்​கும் சட்​டப்​பேர​வை​யில் கடுமை​யான அரசி​யல் நெருக்​கடியை கொடுக்​கும் எனவும், சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சிகளின் குரல் மேலும் வலுப்​பெறும் என திமுக கணக்கு போடு​வ​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்​வாகி​களிடம் பேசி​ய​போது, எங்​கள் தரப்​பில் யாரிட​மும் பேச்​சு​வார்த்தை எது​வும் இது​வரை நடத்​தப்​பட​வில்​லை. அடுத்த சில நாட்​களில் கட்​சி​யின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெறவுள்​ளது. அதில் இதுபற்றி வி​வா​திக்​கப்​படலாம்​ எனத்​ தெரிவித்​தனர்​.

Related Post

ரஜினி, அஜித்துக்கு இன்று புகழாரம்.. அன்று வசைபாடு! சீமானை விளாசும் தவெக பாய்ஸ்..!

Posted by - September 16, 2025 0
சீமான் தனது கடந்த காலத்தில் ரஜினி, அஜித்தை விமர்சித்ததையும், விஜய்யை அரசியலுக்கு அழைத்த வீடியோவையும் தவெக தொண்டர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு…
Magalir Urimai Thogai

Magalir Urimai Thogai: மகளிர்களுக்கு 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்

Posted by - May 14, 2026 0
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த…

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - July 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…
ops 2

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

Posted by - February 27, 2026 0
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…

விஜயின் முதல் அரசியல் மாநாடு… விழாக்கோலம் பூண்டுள்ள விக்கிரவாண்டி

Posted by - October 27, 2024 0
அரசியல் வருகைக்கு பின், முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்ன சொல்லப்போகிறார்?, அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே மட்டுமன்றி, தமிழ்நாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *