Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சிக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று இறுதிச் சுற்று நடைபெற்றுள்ளது. இந்த இறுதி சுற்றில் திவ்யா கணேஷ், அரோரா, சபரி மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இதற்கிடையே, அவர்களில் யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதுப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். திரைத்துறை பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், நடிகைகள் மற்றும் சோஷியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் என கலவையாக இந்த சீசனில் நுழைந்தனர். ஆனால், இந்த சீசன் தொடங்கியது முதல் மக்கள் மத்தியில் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. மாறாக, இந்த சீசனில் எந்த கன்டென்ட்டும் இல்லை என்ற பேச்சுக்கள் எழுந்தன.இதற்கிடையே தான் வைல்டு கார்டு என்ட்ரி நடந்தது. அதுவும் குறைந்த நாட்களிலேயே வைல்டு கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பிய வரலாறும் இந்த சீசனில் தான் அரங்கேறியது. இந்த சீசனுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் குறைந்து வந்ததால் ஆட்டத்தை மாற்றும் வகையில் 4 போட்டியாளர்கள் புதிதாக உள்ளே அனுப்பப்பட்டனர். அதன்படி, பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தார்கள். ஆனால், அப்போதும் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போல் கூச்சலும் குழப்பமும் ஆகவே நிகழ்ச்சி தொடர்ந்தது.ஆனால், வோட்டிங் அடிப்படையில் வினோத் டாப்பில் இருந்த நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியேறினார். இதை தொடர்ந்து, அரோரா தான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வோட்டிங் அடிப்படையில் திவ்யா தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்தன. அதனால் அவர் தான் டைட்டிலை வெல்வார் என்று கணிக்கப்பட்டது.
- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்..
Related Post
விவாகரத்திற்கு பிறகு புதிய காதலருடன் நடிகை எமி ஜாக்சன்- வெளியிட்ட மோசமான புகைப்படம்
எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த ஹாலிவுட் நாயகி தான் எமி ஜாக்சன். அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து…
கொண்டைக்கடலை… ஊற வெச்சு சாப்பிட்டாலே ஆயுசு கூடும்.. ஹீமோகுளோபின் குறைபாட்டை தீர்க்கும் கொண்டைக்கடலை
சென்னை: சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், கட்டாயம் சாப்பிட வேண்டிய பயிறுதான் கொண்டைக்கடலை.. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக தரும் இந்த பயிறு பற்றின நன்மைகள் என்னென்ன…
‘ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..’ பிரதீப் அந்தோணியின் பதிவு..!
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாய் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு கிடைத்த கமெண்ட்ஸ்களை பார்த்து’ஒரு…
வெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியேறும் மயில்..
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் தற்போது மயில் தன்னை விட இரண்டு வயது…
ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்
விஜய் டிவி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது, நிறைய இளைஞர்களை கவரும்…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (287)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- “சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

- அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? – முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்

- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

- “பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!
