annamalai

‘சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 3-வது மொழியை கட்டாயம் ஆக்குவதா?’ – மத்திய அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு

62 0

சென்னை: “சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டில் இருந்தே மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கியுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கடந்த 2026-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், சிபிஎஸ்இ அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பிட்ட 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, சிபிஎஸ்இ அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, சிபிஎஸ்இ அமைப்பு மீறியிருக்கிறது.

சிபிஎஸ்இ அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கெனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்துக்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.

எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

1½ நிமிடங்களில் முடிந்தது கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை- டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை

Posted by - March 15, 2023 0
புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது. 4-வது முறையாக கர்ப்பம் அடைந்த…

சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்

Posted by - May 30, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில்…

பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

Posted by - July 1, 2023 0
பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில்…

புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு: பாராளுமன்றத்தில் மசோதா அறிமுகம்?

Posted by - December 12, 2023 0
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது. என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *