aiadmk

CV Shanmugam : தவெகவிற்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு.? சி.வி.சண்முகம் தலைமையில் இரவில் நடந்த ரகசிய கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்

78 0

ஆட்சி அமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் அசத்திய விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியாக அதிமுகவும் வீழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்த விஜய் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 117 தொகுதிகளை எட்ட முடியாத காரணத்தால் தமிழகத்தில் பல வருடங்களுக்கு பிறகு தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் தொங்கு சட்டசபை

எனவே திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்தோ அல்லது அதிமுகவை கூட்டணியில் இணைத்தோ பெரும்பான்மையை காண்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார். அப்போது தவெக எம்எல்ஏக்கள் கொடுத்த ஆதரவு  கடிதத்தோடு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். இதனையடுத்து நாளை விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்கவுள்ள நிலையில், இன்னும் இரண்டு வார காலத்தில் பொரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது.

சி.வி.சண்முகம் ஆலோசனை

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், திடீர் திருப்பதாக நேற்று இரவு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.

தவெகவிற்கு ஆதரவளிக்க முடிவு.?

இதனையடுத்து சி.வி.சண்முகம் தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமானது  திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Post

“எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை” முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - July 16, 2025 0
யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், “இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்” என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சினிமா டயலாக்கை…

நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு

Posted by - March 3, 2025 0
இந்தியாவின் கடன் தொகை 55.87 லட்சம் கோடியில் இருந்து 181.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றால் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? என அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு…

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

Posted by - July 22, 2025 0
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள…
tn bjp

தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்

Posted by - March 25, 2026 0
 கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எவையும் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை அதிமுக…
Gemini Generated Image r7rbbvr7rbbvr7rb

தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Posted by - April 7, 2026 0
தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *