tvk cm e1777981664118

Vijay Swearing-In: ”ஜோசப் விஜய் ஆகிய நான்” முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

57 0

Vijay Swearing-In Ceremony: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு எப்போது? எங்கே? தேதி குறித்த தவெக!

தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் தேவை என்பதால், சில கட்சிகளின் ஆதரவைக் கோரி, தவெக ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.

11 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

குறிப்பாக, தவெக தலைவர் விஜய், 2 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றதால் 107 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் 11 உறுப்பினர்களின் ஆதரவை தவெக கோர வேண்டும். இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5 இடங்களிலும் விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும் என 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இவர்களின் ஆதரவை விஜய் கோருவாரா? அல்லது காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, அமமுக ஆதரவை விஜய் கேட்பாரா என்று மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

சட்டப்பேரவைக் குழுத் தலைவரான விஜய்

இந்த நிலையில், பனையூரில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி விஜயை இன்று சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகரிடம் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தவெக தலைவர் விஜய் அழைப்பு கடிதம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (மே 7) தவெக தலைவர் ஜோசப் விஜய்  தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகக் குறிப்பிடத்தக்கது.

Related Post

Generated Image January 01 2026 12 01PM

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…
Generated Image November 22 2025 10 34AM

பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ – பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?

Posted by - November 22, 2025 0
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும்…

விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் – லிஸ்டில் இருப்பது என்ன?

Posted by - August 23, 2025 0
TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம், ஆட்டோவை பொது சின்னமாக பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்…
vijay 2

“என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

Posted by - April 21, 2026 0
உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த மற்றும் பலர் சக்தியாலும் பிரிக்கவே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *