tamilnasdu

சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெக வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் திட்டம்

152 0

சென்னை: ​தி​முக, அதி​முக​வுக்கு இணை​யாக தவெகவின் வழக்​கறிஞர் அணியை பலப்​படுத்த விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறார். தமிழகத்​தில் மாறி மாறி ஆட்​சிக்கு வந்த திமுக, அதி​முக​வுக்கு பெரும் பலமாக இருப்​பது வழக்​கறிஞர் அணி​கள்.

தேர்​தல் நேரத்​தில் வேட்​புமனு உள்​ளிட்ட ஆவணங்​களை முறை​யாக தயாரித்​துக் கொடுத்​தல், கட்சி அளவிலும், அரசுக்கு ஆதர​வான, எதி​ரான வழக்​கு​களில் உள்​ளூர் நீதி​மன்​றம் முதல் உச்ச நீதி​மன்​றம் வரை சென்று வாதிட்டு வெற்​றியைத் தேடித் தருதல், எம்​.பி. எம்​எல்​ஏக்​கள், உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​கள் தேர்வு வரை சட்ட ரீதி​யான அனைத்து விவ​காரங்​களி​லும் வழக்​கறிஞர் அணி​யின் பங்கு முக்​கிய​மானது.

பொது​வாக, ஆளுங்​கட்​சி​யின் வழக்​கறிஞர் அணி​யில் இருந்து திறமை​யான, நன்கு பரிச்​சய​மான, கைதேர்ந்த வழக்​கறிஞர்​களே உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களுக்கு அரசு வழக்​கறிஞர்​களாக ஆளுங்​கட்சி சார்​பில் நியமிக்​கப்​படு​வார்​கள்.

குறிப்​பாக, உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தலைமை வழக்​கறிஞ​ராக நியமிக்​கப்​படு​பவர்​தான் அரசி​யலமைப்​புச் சட்ட ரீதி​யாக அரசுக்​கும், நீதித் துறைக்​கும் இடையே ஒருங்​கிணைப்பு பால​மாக செயல்​படும் மாநில அரசின் உயர் பதவி வகிக்​கும் சட்ட அதி​காரி ஆவார்.

அவரது தலை​மை​யின்​கீழ் உரிமை​யியல், குற்​ற​வியல் வழக்​கு​களைக் கையாளும் வகை​யில் அமை​யும் 100-க்​கும் மேற்​பட்ட அரசு வழக்​கறிஞர்​கள் குழு, ஆட்​சி​யாளர்​களுக்கு பக்​கபல​மாக செயல்​படும்.

புதிய கட்​சி​யான தவெக​வில் திமுக, அதி​முக அளவுக்கு பலமான வழக்​கறிஞர் அணி இல்​லை. இதனால், முதல் வேலை​யாக கட்​சி​யின் வழக்​கறிஞர் அணியை பலப்​படுத்த விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார்.

ஒரு​வேளை, தொங்கு சட்​டப்​பேரவை அமைந்​தா​லும், சட்ட ரீதியி​லான அடுத்​தகட்ட நகர்​வு​களுக்கு கைதேர்ந்த சட்ட நிபுணர்​களின் ஆலோ​சனை தேவை என்​பதை உணர்ந்​துள்ள அவர், தமிழகம் முழு​வதும் உள்ள தவெக வழக்​கறிஞர் அணியை தனது நேரடி கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வந்​துள்​ளார்.

பல்​வேறு கட்​சிகளில் பொறுப்பு வகித்த மூத்த வழக்​கறிஞர்​கள் பலரும், தேர்​தல் வெற்​றிக்கு முன்பே தவெக​வில் இணைவதற்கு காய் நகர்த்​தினர். அவர்​களில் திறமை​யானவர்​களை அடை​யாளம் கண்​டு, கட்​சிக்​குள் இணைத்​துக் கொள்ள விஜய் ஒப்​புதல் அளித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தவெக வழக்​கறிஞர் அணி​யில் இணைந்​தால், அரசு வழக்​கறிஞர்​ பதவி கிடைக்​கும்​ என்​ற எண்​ணத்​தில்​ ​மாற்​றுக்​ கட்​சிகளைச்​ சேர்​ந்​த பெண்​ வழக்​கறிஞர்​கள்​ பலரும்​ தற்​போது தவெக​வில்​ இணை​ய அதி​க ஆர்​வம்​ ​காட்​டி வருகின்​றனர்​.

Related Post

tvk cm 2

Vijay Swearing-In: ”ஜோசப் விஜய் ஆகிய நான்” முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

Posted by - மே 6, 2026 0
Vijay Swearing-In Ceremony: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு எப்போது? எங்கே? தேதி குறித்த தவெக! தவெக தலைவர் விஜய் நாளை  (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப்…
aiadmk

CV Shanmugam : தவெகவிற்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு.? சி.வி.சண்முகம் தலைமையில் இரவில் நடந்த ரகசிய கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்

Posted by - மே 6, 2026 0
ஆட்சி அமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் அசத்திய…
mks scaled

DMK: சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் – அறிவாலய கணக்கு?

Posted by - ஜூன் 13, 2026 0
DMK Stalin: சட்டமன்ற தேர்தலில் சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக, அதை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் கட்சியில் பல மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாம். DMK…
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

TVK vs DMK: விஷயம் டாப் சீக்ரெட்- தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..!

Posted by - ஜூன் 25, 2026 0
TVK DMK: தவெக எம்.எல்.ஏக்களை பேரம் பேச முயன்றதற்கு பதிலடியாக தான், எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. TVK…

“கடலில் பேனா நினைவு சின்னம் வைத்தால் நிச்சயம் உடைப்பேன்…” – மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு..!

Posted by - ஏப்ரல் 7, 2023 0
குண்டு வைத்து கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல, குடிக்க வைத்து கொள்வதும் இனப்படுகொலைதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. சென்னை துறைமுகத்தில் உள்ள…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன