Generated Image January 07 2026 5 00PM

’DMK FILES’

131 0

தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழக தேர்தல்- அதிமுகவின் புதிய வியூகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கநெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதுஅதிலும் முன் கூட்டியே தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறதுஇதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதுதற்போது வரை 4 முனை போட்டி தமிழகத்தில் உறுதியாகியுள்ளதுஇதில் திமுக– அதிமுக இடையிலான போட்டியால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளதுஇதில் முதல்கட்டமாக திமுக அமைச்சர்கள் மீது அதிமுக– பாஜக கூட்டணி குறிவைத்துள்ளது திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேடி தேடி எடுத்துள்ளது அதிமுக தலைமைஅந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை தயார் செய்துள்ளது.

அமைச்சர்கள் மீதான புகார்- தேடி எடுக்கும் அதிமுக

நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்ரவியை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான பட்டியலை வழங்கினார்இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்56 மாதங்களாக வெளிப்படை தன்மை இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப் பெரிய கடன் சுமையில் திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் தெரிவித்தார்

ஆளுநரிடம் ஆதாரங்களை கொடுத்த இபிஎஸ்

அந்த வகையில் பின்வரும் துறைகளில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது:

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  ₹64,000 கோடி
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ராஜ் துறை  ₹60,000 கோடி
  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  ₹60,000 கோடி
  • மின்சாரத் துறை  ₹55,000 கோடி
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை  ₹50,000 கோடி
  • பதிவுத் துறை  ₹20,000 கோடி
  • நெடுஞ்சாலைத் துறை  ₹20,000 கோடி
  • நீர்வளத் துறை  ₹17,000 கோடி
  • பெருநகர சென்னை மாநகராட்சி  ₹10,000 கோடி
  • தொழில் துறை  ₹8,000 கோடி
  • பள்ளிக் கல்வித் துறை  ₹5,000 கோடி
  • சமூக நலத் துறை  ₹5,000 கோடி
  • வேளாண்மைத் துறை  ₹5,000 கோடி
  • சுகாதாரத் துறை  ₹4,000 கோடி
  • உயர்கல்வித் துறை  ₹1,500 கோடி
  • இந்து சமய அறநிலையத் துறை  ₹1,000 கோடி
  • ஆதிதிராவிடர் நலத்துறை  ₹1,000 கோடி
  • சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை  ₹750 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  ₹500 கோடி
  • சிறைத் துறை  ₹500 கோடி
  • சுற்றுலாத் துறை  ₹250 கோடி
  • பால்வள மேம்பாட்டுத் துறை  ₹250 கோடி

இந்த லட்சம் கோடி ஊழல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தவும்இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும்உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் அதிமுக முறைப்படி வலியுறுத்தியுள்ளது. “தமிழக மக்களுக்குத் தூய்மையான நிர்வாகம் கிடைக்க வேண்டும்பொதுப்பணத்தைப் பட்டப்பகலில் கொள்ளையடிப்பது தண்டிக்கப்படாமல் போகக்கூடாது,” என்று அதிமுக உறுதியுடன் தெரிவித்துள்ளது.

 இந்த பரபரப்பான நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர்திமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று ஆளுநரிடம் வழங்கிய புகார் மனுவை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய பைல்களுடன் இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக ஆதாரங்களுடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்திருந்தார்அந்த ஆதாரங்களை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறதுஇந்த புகார் மீது விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

vijay 2

“என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

Posted by - April 21, 2026 0
உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த மற்றும் பலர் சக்தியாலும் பிரிக்கவே…
tvkvijay

தவெக உத்தேச அமைச்சர் பட்டியல் தயாரித்தாக திமுக பொய்ப் பிரச்சாரம்: சி.டி.நிர்மல்குமார்

Posted by - April 25, 2026 0
சென்னை: “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உத்தேச அமைச்சர் பட்டியல் விவகாரம் முற்றிலும் பொய்யான பிரச்சாரம். திமுகவினரே இது போன்று திட்டமிட்டு பரப்புகின்றனர்” என தவெக இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார்…

பாமக-வில் பறிபோகும் அன்புமணி பதவி? அதிகாரத்தை இவரிடமா தரப்போகிறார் ராமதாஸ்?

Posted by - August 12, 2025 0
ராமதாஸ் தலைமையில் வரும் 17ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக பல முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில்…

2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

Posted by - December 30, 2025 0
 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும்…

அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!

Posted by - October 29, 2025 0
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *