Google Pay-க்கு குட்பை? தூக்க மாட்டோம்னு சொல்லிட்டு சுந்தர் பிச்சை பார்த்த வேலை.. இனிமேல் ஒன்னு ஒன்னா மாறும்!

254 0

கூகுள் நிறுவனம் அதன் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) ஆன கூகுள் வாலட்டை (Google Wallet) இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்தே.. “அப்போ இந்தியாவுல கூகுள் பே ஆப்பின் கதை முடிஞ்சதா?” என்கிற கேள்வி வலுவடைந்து கொண்டே போகிறது. கூடுதலாக, அமெரிக்காவில் கூகுள் பே ஆப் (Google Pay App) ஆனது ஷட்டவுன் (Shutdown) செய்யப்படுவதும், அதற்கு பதிலாக இனிமேல் கூகுள் வாலட்டை தான் பயன்படுத்த வேண்டும் என்கிற நடவடிக்கைகள் எல்லாம்.. இந்தியாவிலும் அது நடக்கும் என்கிற சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்துள்ளன.

இதற்கிடையில் சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் நிறுவனம் அதன் கூகுள் வாலட் சேவையில் “முக்கிய மாற்றங்களை” செய்துள்ளது. கூகுள் நிறுவனம் அப்படி என்ன செய்துள்ளது? இதனால் இந்தியாவில் உள்ள கூகுள் பே ஆப்பின் கதை முடியும் வாய்ப்புகள் உள்ளதா? கூகுள் வாலட் மற்றும் கூகுள் பேவிற்கு இடையே உண்மையிலேயே வேறுபாடு உள்ளதா? இதோ விவரங்கள்:

தற்போது வரையிலாக, டேப் அன்ட் பே வசதி (Tap and Pay Facility) வழியாக பணம் செலுத்திய பிறகு, குறிப்பிட்ட பரிவர்த்தனை குறித்த நோட்டிஃபிக்கேஷன்களுக்கு (Transaction notifications) கூகுள் பிளே சேவைகள் (Google Play Services) தான் பொறுப்பாகும். ஆனால் கூடிய விரைவில் அந்த பொறுப்பை கூகுள் வாலட் எடுத்துக்கொள்ள உள்ளது.யூசர் எக்ஸ்பீரியன்ஸை (User Experience) மேம்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட் வழியாக கூகுள் வாலட் ஆப் ஆனது நேரடி பயன்பாட்டு அறிவிப்புகளை (Direct App Notifications) வெளியிட தொடங்கியுள்ளது. அதாவது ட்ரான்ஸ்சாக்ஷசன்ஸ் (Transactions), அப்டேட்ஸ் (Updates), ஆஃபர்ஸ் (Offers) மற்றும் டிப்ஸ் (Tips) தொடர்பான நோட்டிஃபிக்கேஷன்கள், கூகுள் பிளே சேவைகள் மூலமாக இல்லாமல் கூகுள் வாலட் ஆப் வழியாகவே கிடைக்கும்இப்படியாக கூகுள் நிறுவனம் அதன் கூகுள் வாலட்-ஐ நாளுக்கு நாள் மேம்படுத்தி கொண்டே வருகிறது; ஒருகட்டத்தில் இது கூகுள் பே ஆப்பை விட சிறந்த மற்றும் பரந்த அளவிலான நன்மைகள் மற்றும் வசதிகள் (Benefits and Features) கொண்ட ஆப் ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; இதன் விளைவாக கூகுள் பே பயனர்கள் தானாகவே முன்வந்து கூகுள் வாலட் ஆப்பிற்கு இடம்பெயர்ந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை! கூகுளின் கூற்றுப்படி, அமெரிக்காவை போல் இல்லாமல் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் (India and Singapore) கூகுள் பே ஆப் ஆனது ஒரு ஸ்டான்ட்அலோன் ஆப் (Standalone App) ஆக தொடர்ந்து வேலை செய்யும். ஏனென்றால் இவ்விரு நாடுகளிலும் கூகுள் பே ஆப் யூசர்களின் எண்ணிக்கை மற்றும் கூகுள் பே ஆப்பின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதை கூகுள் நிறுவனம் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இருப்பினும் கூகுள் பே சேவைகள் ஷட்டவுன் செய்யப்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு.. எளிமையாக கூகுள் வாலட்டிற்கு இடம்பெயரும் வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதையும்.. கூகுள் பேவில் உள்ள பேலன்ஸை (Balance) கூகுள் வாலட்டிற்கு டிரான்ஸ்பர் செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுப்பதையும் பார்த்தால்.. எப்போது வேண்டுமானாலும்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது. கூகுள் வாலட் மற்றும் கூகுள் பேவிற்கு இடையே உண்மையிலேயே வேறுபாடு உள்ளதா? உள்ளது! கூகுள் வாலட் ஆப்பில் பணம் செலுத்துதல் (Payment Related features) தொடர்பான எந்த அம்சங்களும் இல்லை. ஆனால் கூகுள் பே ஆப் ஆனது பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்த பயன்படுத்தப்படுகிறது. ஒரு செய்திக்குறிப்பில் “கூகுள் வாலட் ஆனது கூகுள் பே ஆப்பை நிறைவு செய்கிறது (Google Wallet complements Google Pay)” என்று கூகுள் தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Related Post

12 பிரம்படி, 18 வருடங்கள் சிறை: பணிப்பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு, சிங்கப்பூரில் தண்டனை

Posted by - August 8, 2023 0
சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு…

இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

Posted by - May 22, 2025 0
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின்…

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

Posted by - August 24, 2023 0
புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின்…

இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

Posted by - November 26, 2024 0
 மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில…

இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிக நிலநடுக்கங்கள் – சிக்கித் திணறிய துருக்கி

Posted by - February 20, 2023 0
துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *