INDI

இண்டியா கூட்டணியை விட்டு விலகும் திமுக? – இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாஜக

67 0

ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறி​வித்​திருக்​கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறி​வித்​திருக்​கும் திமுக, காங்​கிரஸ் பங்​கேற்​கும் எந்​தக் கூட்டத்​தி​லும் இனி பங்​கேற்​க​மாட்​டோம் என்றும் அறி​வித்​திருக்​கிறது.

திமுக-​வின் இந்த முடிவு ஏற்​கெனவே எதிர்​பார்த்த ஒன்​று​தான். அதேசம​யம் இந்த விஷ​யத்​தில் ஒரே கல்​லில் இரண்டு மாங்காய்களை சத்​தமில்​லாமல் அடித்​துச் சாய்த்​து​விட்ட திருப்தியில் இருக்​கிறது பாஜக. இத்​தனை நாளும் இண்​டியா கூட்டணி​யின் பிர​தான அங்​க​மாக இருந்​தது திமுக. ஸ்டா​லின் தான் ‘ராகுல் பிரதமர்’ என்ற கோஷத்தை முதலில் முன்னெடுத்தவர். ‘ஸ்​வீட் எடு… கொண்​டாடு’ என்று சொல்லுமளவுக்கு ராகுலும் ஸ்டா​லினும் அண்​ணன் – தம்பி உறவு​முறை கொண்​டாடி​னார்​கள். அதே​போல், காங்​கிரஸை விட ஆக்ரோஷ​மாக மோடியை​யும் பாஜக-வை​யும் எதிர்த்​தவரும் ஸ்டாலின் தான்.

இதையெல்​லாம் பாஜக ரசிக்​க​வில்​லை. குறிப்​பாக, வடமாநிலங்களில் தங்​களால் வழித்​துப் போடப்​பட்ட காங்​கிரஸை தமிழகத்​தில் திமுக தோளில் தூக்​கிச் சுமப்​பதை பாஜக தலைமை சுத்​த​மாக விரும்​ப​வில்​லை. பல நேரங்​களில் ‘காங்​கிரஸை உடன் வைத்​திருக்​காதீர்​கள்’ என்ற சமிக்​ஞையை பாஜக தலை​வர்​கள் திமுக-வுக்கு மறை​முக​மாக உணர்த்​தி​னார்​கள். அதைக் கேட்​காத​தால் திமுக சந்​தித்த சங்​கடங்​களும் ஏராளம் உண்​டு.

திமுக-வை பொறுத்​தவரை, மத்​தி​யில் பாஜக-வை எதிர்​கொள்​ளும் தேசிய சக்தி என்ற முறை​யில் காங்​கிரஸை பெரிதும் நம்​பியது. ஆனால், இந்​தத் தேர்​தல் அந்த நம்​பிக்​கையை எல்​லாம் தூள் தூளாக்​கி​விட்​டது. ஆரம்​பத்​திலிருந்தே தவெக-வைக் காட்டி திமுக-வை நெருக்​கிய காங்​கிரஸ், விரலில் வைத்த மை காயும் முன்​பாகவே தவெக-வுக்கு ஆதர​வளித்து அமைச்​சர​வை​யிலும் துண்டு போட்​டது. அத்​துடன், “இனி வரும் தேர்​தல்​களி​லும் தவெக-வுடன் தான் கூட்​ட​ணி” என்​றும் தாமாக முன்​வந்து அறி​வித்​தது. இதெல்லாம் விசில் அலை​யிலும் காங்​கிரஸுக்கு 5 எம்எல்ஏக்களை வென்று கொடுத்த திமுக-வுக்கு கடும் மன உளைச்​சலை ஏற்படுத்தி​யது.

இந்த நிலை​யில், காங்​கிரஸ் பங்​கேற்​கும் இண்​டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அறி​வித்​திருக்​கும் திமுக, “நாட்டு நலன் கருதி இண்​டியா கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகள் முன்​வைக்​கும் பிரச்​சினை​களுக்கு ஆதர​வாக குரல்​கொடுப்​போம்” என்று சொல்லி இருக்​கிறது. இண்​டியா கூட்​ட​ணி​யில் ஆகப்​பெரும் கட்​சி​யாக காங்​கிரஸ் இருந்​தா​லும் கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகளுக்கு காங்​கிரஸ் மீது ஏதோ ஒரு மன வருத்​தம் இருக்​கவே செய்​கிறது. அத்​தகையை வருத்​தம் ஏதும் இல்​லாமல் இருந்த ஒரே கட்சி திமுக மட்​டும் தான். இப்​போது அதை​யும் பகைத்​துக் கொண்​டு விட்​டது காங்​கிரஸ். திமுக-வுக்​குப் பதிலாக தவெக இண்​டியா கூட்​ட​ணி​யில் சேரலாம் என செய்​தி​கள் வரு​கின்​றன.

தங்​களுக்கு தமிழகத்​தில் சிம்ம சொப்​பன​மாக இருந்த திமுக இந்​தத் தேர்​தலில் வீழ்த்​தப்​பட்​டது பாஜக-வுக்கு கிடைத்த முதல் வெற்​றி. இத்​தனை நாளும் மத்​திய பாஜக அரசை போட்​டுத் தாக்​கிக் கொண்​டிருந்த திமுக-வுக்கு இப்​போது, விஜய் அரசை விமர்​சிக்​கவே நேரம் போத​வில்​லை. அதனால், சிபிஎஸ்இ கேள்​வித்​தாள் விவ​காரம் உள்​ளிட்ட மத்​திய அரசை சங்​கடப்​படுத்​தும் பல விஷ​யங்​களை திமுக கண்​டு​கொள்​ளவே இல்​லை. இந்த நிலை​யில், இண்​டியா கூட்​டணி கூட்​டத்தை திமுக புறக்​கணித்​திருப்​ப​தில் பாஜக-வுக்கு இரட்​டிப்பு மகிழ்ச்​சி. இதன் மூலம், தொடக்​கம் முதலே தங்​களுக்கு தொல்லை கொடுத்து வரும் இண்​டியா கூட்​ட​ணி​யை​யும் கலகலக்க வைத்​து​விட்ட சந்​தோஷத்​தில் திளைக்​கிறது அந்​தக் கட்​சி.

இண்​டியா கூட்​டணி கூட்​டத்தை புறக்​கணிப்​ப​தாக திமுக மட்​டும் வெளிப்​படை​யாக அறி​வித்​திருக்​கிறது. காங்​கிரஸ் மீதிருக்​கும் வருத்​தங்​களால் இன்​னும் சில கட்​சிகளும் கூட்​டத்​தைப் புறக்​கணித்​தால் இண்​டியா கூட்​ட​ணிக்கு மாற்​றாக இன்​னொரு கூட்​டணி பிறக்​கலாம். ஒரு​வேளை, இந்த விஷ​யத்​தில் தேசிய அளவில் காங்​கிரஸ் தனிமைப்​படுத்​தப்​பட்​டாலும் ஆச்​சரியமில்​லை.

அப்​படி தாங்​கள் தனிமைப்​படுத்​தப்​பட்​டால் விஜய்க்கு இருக்​கும் பாப்​புலாரிட்​டியை வைத்து தமிழ்​நாடு, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, புதுச்​சேரி மாநிலங்​களில் தங்​களை நிலைநிறுத்​திக் கொள்ள நினைக்​கலாம் காங்​கிரஸ். அப்​படி​யான சூழலில் விஜய் – காங்​கிரஸ் கூட்​ட​ணியை சமாளிக்க தி​முக – பாஜக கூட்​டணி மலர​வும் வாய்ப்​பு​கள் அதி​கம். ஆக, இண்​டியா கூட்​ட​ணி​யில்​ இருந்​து இந்​த இரண்​டு கட்​சிகளில்​ எது தனிமைப்​படுத்​தப்​பட்​டாலும்​ பாஜக-வுக்​கு பம்​பர்​ குலுக்​கல்​ ​தான்​.

Related Post

தீபாவளிக்கு மழை உறுதி! 20 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

Posted by - October 18, 2025 0
வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. தீபாவளி திங்களன்று…

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்

Posted by - January 30, 2025 0
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர்…

விஜய் கட்சியின் பெயர் இதுவா?

Posted by - January 30, 2024 0
விஜய் தற்போது தமிழ் சினிமா துறையில் டாப் ஹீரோவாக வலம் வரும் நிலையில், தனது ரசிகர்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.…
tvk vijay 3

TTV Dhinakaran: ”விஜயின் இமேஜை உடைக்கணும்” போலி கடிதம் கொடுத்ததா தவெக? – டிடிவி தினகரனின் புகரால் பரபரப்பு

Posted by - May 9, 2026 0
TTV Dhinakaran TVK Vijay: தவெக தலைவர் விஜயின் இமேஜை உடைக்கும் வகையில், அவர் குதிரை பேரம் நடத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். TTV…
Generated Image January 01 2026 12 01PM

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *