பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை: அதிமுக தீர்மானம் முழு விவரம்..

292 0

இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த தீர்மானத்தை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே அதிமுக – பாஜக தலைவர்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன.. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ளும் என தகவல்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிலையில், அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுகவின் அவசர ஆசோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள் பின்வருமாறு:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, கட்சியின் உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும்,  மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்சு, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை’ சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும்,  கழகப் பொதுச் செயலாளர்,  எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர்,  எடப்பாடிபழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…

மு.க.ஸ்டாலினே வந்து உட்கார்ந்தாலும் கோவையில் பாஜகதான் வெற்றி பெறும் – அண்ணாமலை சவால்

Posted by - March 23, 2024 0
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவை தொகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் . கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தங்கியிருந்து பரப்புரை செய்தாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில்…

அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

Posted by - August 9, 2025 0
அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில்…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *