paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

254 0

3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில் செயல்படுத்தக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.டிஜிட்டல் மயமாக்கலுக்கு நடுவே UPI மூலம் டிஜிட்டல் முறையில் பேமெண்ட்ஸ் செய்வது மக்களிடையே மிகவும் பொதுவான பழக்கமாக மாறி விட்டது. கடந்த அக்டோபரில் UPI மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சுமார் 7.7% உயர்ந்து 730 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த ரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.12.11 லட்சம் கோடிக்கும் அதிகம். கடந்த செப்டம்பரில் 678 கோடி எண்ணிக்கையிலான UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ11.16 லட்சம் கோடி ஆகும்.இந்நிலையில் தற்போது UPI பரிவர்த்தனைகள், ஃபோன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட எந்த UPI அடிப்படையிலான ஆப்ஸ்களிலும் பரிவர்த்தனைகளுக்கு வால்யூம் கேப் இல்லை. இந்நிலையில் தான் UPI டிஜிட்டல் சிஸ்டமிற்கு பொறுப்பான NPCI, தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் லிமிட்டை கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட காலக்கெடுவை செயல்படுத்த ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Related Post

தமிழகத்திற்கு தண்ணிர் திறந்து விட முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி!

Posted by - July 13, 2024 0
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார்…

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்

Posted by - December 13, 2023 0
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2023 0
புதுடெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன்: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்

Posted by - July 6, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார்…

கனமழையால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டிய நீர்மட்டம்: கரையோர மக்கள் வெளியேற்றம்

Posted by - July 11, 2023 0
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *