%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE

சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலின்.. சுத்துப் போட்ட தவெகவினர்.. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

149 0

அரசியலில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க முடியாமல், ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்வதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் தரமா? என மு.க.ஸ்டாலினை தவெக அமைச்சர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெக அமைச்சர்கள், பிற கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக தலைவர் ஸ்டாலின் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார்.  இதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு  தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்  நிலையில்…  அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.  அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்” என கடுமையாக சாடியுள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட கண்டன பதிவில், “தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா? பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ. நிலை மாறினால் குணம் மாறுவான் . பொய் நீதியும் நேர்மையும் பேசுவான். தினம் ஜாதியும் பேதமும் கூறுவான். பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டதிமுக தலைவரே.. மன்னிப்பு கேள்” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட பதிவில்,”சத்தியபாமாவை ஸ்டாலின் கேலிச்சித்திரம் வரைந்த செயல் தவறானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தேர்தல் பிரச்சாரமா? அல்லது பெண்களைக் கேலி செய்வதன் மூலமான பிரச்சாரமா? உங்கள் அரசியலில் இப்படித்தான் பெண்களைக் கேலிச்சித்திரம் வரைவீர்களா? மக்களின் வாக்குகளை நாடும் அரசியல் கட்சிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா?” என கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ள அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “நான்காம் தர மேடைப் பேச்சாளர்கள் போல காலாகாலமாக தொடர்ந்து பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி  கீழ்தரமாக நடந்து கொள்வதை மட்டுமே திமுகவில் தந்தையும் மகனுமாக இருக்கும் பரம்பரைத் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மனதில் இருக்கும் வக்கிரத்தை விரக்தியின் உச்சத்தில்  இன்று தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது” என தெரிவித்துள்ளார்

அமைச்சர் விஜய்பாலாஜி, “ காந்தியடிகளின் பிறந்த தினத்தில் அவரது உயரிய கொள்கைகளில் முதன்மையானதான பெண்கள் விடுதலை, பெண்கள் உரிமை மற்றும் பெண்களுக்கான சம மரியாதை ஆகியவற்றை முற்றிலும் இழிவுபடுத்தும் விதமாக திமுக தலைவரின் இன்றைய பிரச்சாரப்  பேச்சு அமைந்துள்ளது. பெண்களை உருவக்கேலி செய்வதை திமுக தலைவர்  ஸ்டாலின்,   அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வாடிக்கையாக கொண்டுள்ளது ஒட்டுமொத்த தமிழக பெண்களின் கண்ணியத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும்” என விமர்சித்துள்ளார்.

அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட பதிவில், “அரசியலில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க முடியாமல், ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்வதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் தரமா? ஐந்து ஆண்டுகால அதிகார ஆணவ ஆட்சிக்குப் பிறகும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு குறித்து எந்த சுயபரிசோதனையும் செய்யாமல், மீண்டும் அதே அவதூறு, கேலி, தனிநபர் தாக்குதல் அரசியலை முன்னெடுப்பது வெட்கக்கேடானது” என தெரிவித்துள்ளார்.

 

Related Post

வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக!

Posted by - ஏப்ரல் 11, 2026 0
சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கி  இருந்தும் தவெக இந்த பிரசாரங்களை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் சட்டமன்றத்…

விவசாயம் குறித்து விவாதிக்கத் தயாரா..?

Posted by - ஏப்ரல் 4, 2024 0
கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிசாமி விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை – மகன்! காரணமான முகுந்தன் யார்?

Posted by - டிசம்பர் 28, 2024 0
விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம்…
INDI

இண்டியா கூட்டணியை விட்டு விலகும் திமுக? – இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாஜக

Posted by - ஜூன் 5, 2026 0
ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறி​வித்​திருக்​கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த…

விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - அக்டோபர் 30, 2025 0
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தலைமைப் பண்பு மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் செய்தி நாளிதழுக்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன