விவசாயம் குறித்து விவாதிக்கத் தயாரா..?

195 0

கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிசாமி

விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 3) பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பச்சைத்துண்டு பழனிசாமி என்று மு.க. ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். விவசாயம் பற்றி அவருக்கு என்ன தெரியும்?

அ.தி.மு.க. கொடுத்த தொடர் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க.அரசு வழங்குகிறது.வீட்டில் சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவோம் என தி.மு.க.,வினர் மிரட்டி வருகின்றனர். தி.மு.க.,வினர் மிரட்டினால் பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது நான் பொறுப்பு. உரிமைத்தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அ.தி.மு.க., தான். ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.கரூரில் செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர். ஆயுட்காலம் வரையில் சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி. இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதை பொருள் விற்பனையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது. வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக தி.மு.க. பச்சை பொய் கூறுகிறது. தி.மு.க. வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. 95% நிறைவேற்றியதாக பேசுகின்றனர். இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசுதான். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Post

Generated Image November 24 2025 10 41AM

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

Posted by - November 24, 2025 0
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை…
GGG

Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்..

Posted by - April 29, 2026 0
Exit Poll Results: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2021 ஆம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளின்…
Generated Image January 20 2026 11 11AM

ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி – சட்டபேரவையில் என்ன பிரச்னை?

Posted by - January 20, 2026 0
 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர். என் ரவி வெளிநடப்பு செய்தார். TN Assembly 2026: தமிழ்நாடு சட்டமன்றத்தில்…
Gemini Generated Image gy0uv1gy0uv1gy0u

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - March 20, 2026 0
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள…

விளம்பரத்துக்காக ஊர்களுக்கு ஏற்ற உடையை அணிந்து செல்லும் பிரதமர் மோடி – வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Posted by - April 3, 2024 0
விளம்பரத்துக்காக அந்தந்த ஊர்களுக்கு தகுந்த உடையை அணிந்து செல்வதை மட்டுமே பிரதமர் மோடி சரியாக செய்து வருகிறார். ஆனால், அந்த ஊரையும், ஊர் மக்களையும், அவர்களின் பண்பாட்டையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *