Selfie Video எடுத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் சத்தம், வெளியான தரமான வீடியோ!

238 0

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. எதிர்பாராத அளவிற்கு மழை இந்த மழையால், நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுத்தது. அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.

 

 

இதனால் அங்கு வசித்த மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அரசு சார்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டாலும், பல இடங்களில் உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். அரசு மட்டுமல்லாமல் இதர கட்சி நிர்வாகிகளும் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்து வருகின்றனர்.

 

 

இந்த நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, உதவிகளை செய்தார். நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு வந்திருந்த மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கிய விஜய் அங்குள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருடனும் செல்ஃபி எடுத்தார்.

இதனால் அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சி கடலில் பொங்கினர். இறுதியாக அங்கிருந்த தன்னுடைய ரசிகர்களுடன் ஒரு செல்ஃபி வீடியோவும் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது!

Related Post

மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

Posted by - March 11, 2025 0
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும்…

பெண் நடன கலைஞருக்கு பாலியல் சித்ரவதை – திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - March 23, 2024 0
கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பெண் நடன…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!

Posted by - April 14, 2026 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது தமிழ் புத்தாண்டு. ஒவ்வொரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *