TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்

214 0

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளார்.

படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு படுச்சோராக நடந்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பலரது முன்பு சூரி அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்திருக்கும் ரகசியத்தை அவருடைய மனைவி அம்பலப்படுத்தி இருக்கிறார்.

 

சூரி இப்பொழுது சாலி கிராமத்தில் ஆபீஸ் போட்டிருக்கிறார். அந்த ஆபீஸ் வாங்கிய பொழுது, அதனை அதிக லாபத்திற்கு சூரியிடம் விலை பேசி விற்று உள்ளனர். ஒன்றுமில்லாத இடத்திற்கு ஏன் இவ்வளவு காசு கொடுத்து வாங்கி விட்டீர்கள் என இதைப் பற்றி சூரியின் மனைவி கேள்வி கேட்டிருக்கிறார்.

இப்படியா ஏமாறுவீர்கள். நாலு காசு கையில் வந்ததும் நீங்களும் தலைக்கனத்தில் ஆட பார்க்கிறீர்களா என்றும் திட்டி தீர்த்துள்ளார். அதற்கு சூரி, ‘நான் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போது இதே இடத்தில்தான் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடப்பேன். அப்பொழுது ஒரு நாள் மயங்கி விழுந்து விட்டேன்.

 

என்னை தூக்கிக்கொண்டு வந்து அதற்கு எதிரில் உள்ள இந்த டீக்கடையில் தான் டிபன் வாங்கி கொடுத்தார்கள். இப்பொழுது அந்த இடத்திற்கு எதிரில் ஆபீஸ் வாங்கியதை நினைக்கும் போது நான் பட்ட அவமானத்திற்கு எல்லாம் கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.

அது மட்டுமல்ல சினிமாவில் நுழையும் போது நான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தேன் என்பதை மறக்க கூடாது என்பதற்காகவே இந்த இடத்தை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று மனைவியிடம் கூறியுள்ளார்.

Related Post

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

Posted by - February 11, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா…

“சாண்டி மாஸ்டரிடம் கேள்வி கேட்ட தல தோனி! பதில் சொன்ன சாண்டி! அதிர்ந்த அரங்கம்!”

Posted by - July 11, 2023 0
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, சாண்டி மாஸ்டர், வினோதினி, விடிவி கணேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி…

ஹாலிவுட் நடிகை லுக்கில் சமந்தா… வைரல் போட்டோஸ்!

Posted by - March 22, 2023 0
பெரிதும் எதிர்பார்க்கப்படும் சாகுந்தலம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1/ 7 நடிகை சமந்தா தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். 2/ 7 சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’…

மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Posted by - May 4, 2023 0
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக…

சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ

Posted by - December 9, 2024 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். குறிப்பாக அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், சிவகார்த்திகேயனின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. திரையுலக மார்க்கெட்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *