8f44fed2 ef8e 477f 83ff 843d060487c3

Tn President Rule : தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியா.? பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் தவெக- நடப்பது என்ன.?

69 0

Tn President Rule : நாளைய தினம் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க கடைசி நாளாக உள்ளது. அது முடியாத பட்சத்தில் அடுத்ததாக திமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் திமுக மறுக்கும் பட்சத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிக தொகுதிகளை வென்ற தவெக

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றியடைந்துள்ளது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற இலக்கை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைக்க தவெக திட்டமிட்டு கடிதம் எழுதியது. இதனையடுத்து இது தான் சான்ஸ் என காத்திருந்த காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்களோடு முதல் ஆளாக தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

இது மட்டுமில்லாமல் வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி அதற்கான கடிதத்தோடு ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். ஆனால் 118 என்ற பெரும்பான்மை இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க வாய்ப்பு தரப்படும் என ஆளுநர் தெரிவித்துவிட்டார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவெகவினர் தவித்து வருகிறார்கள். மேலும் கடந்த இரண்டு நாட்களாக விஜய்க்கு கொடுக்கப்பட்டிருந்த முதலமைச்சருக்கான கான்வாய் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் தவெக

இந்த சூழலில் தவெகவிற்கு இருக்கும் வாய்ப்பாக விடுதலைசிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு மட்டுமே, தற்போது உள்ள நிலையில் நாளைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது தவெகவிற்கு ஆதரவு அளிப்பதா.? இல்லையா.? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. அதே நேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தவெகவிற்கு ஆதரவு இல்லையென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லையென கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தவெகவிற்கு கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி

விஜய் முதலைச்சராக அவருக்கு இருக்கும் மற்றொரு வாய்ப்பு அதிமுகவின் ஆதரவை தேடுவது தான், அந்த வகையில் ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் தவெகவிற்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே அதிமுகவினர் பல்டி அடிப்பதை தடுக்க புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க கடைசி நாளாக உள்ளது. அது முடியாத பட்சத்தில் அடுத்ததாக திமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க கூடும். ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைக்க விரும்பாத நிலையில் உள்ளது. எனவே யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Post

court

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Posted by - December 5, 2023 0
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி…

ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026

Posted by - March 29, 2025 0
 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் ஆளும் திமுகவை எதிர்கொள்ள, தவெக தலைவர் விஜய் வலுவான வியூகங்களை வகுத்து வருகிறார். வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம்…

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…
Generated Image November 13 2025 10 04AM

கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!

Posted by - November 13, 2025 0
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் இந்தியாவில் முன்மாதிரி கல்விக்கூடமாக மாறியது

Posted by - December 20, 2025 0
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. ரமேஷ் தனது முயற்சியால் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கி, காவல் நிலையத்தை மாணவர்களுக்கு முன்னேற்றக் கூடமாக மாற்றியுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *