vijaybaskar

Vijaya Baskar : எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.?

68 0

Vijaya Baskar : அதிமுக தலைமை மீது அதிருப்தி காரணமாக எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய விஜயபாஸ்கர், இன்னும் தவெகவில் இணையாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. தவெகவில் இணைக்க விஜய் மறுத்துவிட்டாரா? என விவாதம் தொடங்கியுள்ளது.

தவெக வெற்றி – 3வது இடத்தில் அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கட்சியை தொடங்கிய விஜய், ஆட்சியை பிடித்து நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ளார். அதே நேரம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என திட்டமிட்டிருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல இடங்களில் டெபாசிட் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட தொடங்கினார்கள்.

அதிமுக 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா

தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 25 எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம் தலைமையில் செயல்பட தொடங்கினார்கள். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி 25 எம்எல்ஏக்களின் கட்சி பதவி பறித்ததும் இல்லாமல் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தார். இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் தலை தூக்கியது. இதில் மரகதம் குமரவேல் – மதுராந்தகம், எஸ். ஜெயக்குமார் – பெருந்துறை,
பி. சத்தியபாமா – தாராபுரம், இசக்கி சுப்பையா – அம்பாசமுத்திரம் என அடுத்தடுத்து தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். ஆனால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மட்டும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு உள்ளார். இதுவரை வேறு கட்சியில் இணையவில்லை.

விஜயபாஸ்கர் திட்டம் என்ன.?

இது தொடர்பாக புதுக்கோட்டை பகுதியில் விசாரிக்கையில், சி.விஜயபாஸ்கர், அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். ஆனால் கட்சியை விட்டு செல்ல மனமில்லாமல் தவித்துள்ளார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தவெகவிற்கு பதிலாக திமுகவில் இணையவே விஜயபாஸ்கர் முயற்சி செய்துள்ளார். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகளான ரகுபதி, மெய்யநாதன், செல்லபாண்டி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திமுகவில் விஜயபாஸ்கர் இணையமுடியாத நிலை ஏற்பட்டது.

விஜயபாஸ்கரை கைவிட்டாரா விஜய்.?

அடுத்ததாக தவெகவில் இணைய திட்டமிட்டார். ஆனால் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் தான் இணைவேன் என விஜயபாஸ்கர் உறுதியாக சொல்லியுள்ளார். ஆனால் கடந்த சில வாரங்களாக மாற்று கட்சியினர் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முன்னிலையிலேயே இணைந்து வருகிறார்கள். எனவே விஜயபாஸ்கர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியானது இன்னும் நடைபெறாமல் உள்ளது. தற்போது அதிமுகவிலும் இல்லாமல், தவெகவிலும் இல்லாமல் விஜயபாஸ்கர் நட்டாற்றில் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இருந்த போதும் இன்னும் ஓரிரு நாட்களில் தவெகவில் விஜயபாஸ்கர் இணைந்து விடுவார். விரைவில் அறிவிக்கப்படவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விஜயபாஸ்கர் அமைச்சராவார் என அவரது அதரவாளர்கள் நம்பிக்கையோடு தெரிவித்து வருகிறார்கள்.

Related Post

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ – வெளுத்துவிட்ட உதயநிதி

Posted by - May 29, 2026 0
Udhayanidhi Stalin on CM Vijay: கடலூர் பெண் கொலைக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் நேரம் எடுத்து கற்றுக்கொண்டு வந்து சட்டம்…

ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது – எடப்பாடி பழனிசாமி

Posted by - July 9, 2024 0
ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
dmk tvk

TVK Vijay: ‘பொது அறிவு இருக்காது’ – தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!

Posted by - May 1, 2026 0
இந்த சட்டமன்ற தேர்தலில் வினோதினி வைத்தியநாதன் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அவர் தவெகவுக்கு வாக்களித்த பெண்களை சரமாரியாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் அறிவார்ந்த சமூகம் என்பதெல்லாம்…
vvv

ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

Posted by - March 16, 2026 0
கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத்…
unnamed

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Posted by - April 15, 2026 0
திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *