அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

217 0

அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Post

மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல்? -அண்ணாமலை கேள்வி!

Posted by - April 10, 2024 0
தமிழகத்தின் மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று என…

கடுப்பில் அரசு ஊழியர்கள், ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?

Posted by - April 28, 2025 0
அதிருப்தியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்களை குளிர்விக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் திருமணத்திற்கான முன்பணமாக ரூ.5 லட்சம் வரை…

மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Posted by - March 16, 2023 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.   இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

அடுத்த 5 நாட்களுக்கு.. – வெதர்மேன் கொடுத்த ஷாக்

Posted by - April 22, 2024 0
அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த…

நாளைமறுநாள் வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - January 8, 2024 0
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *