அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

193 0

அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார்.

அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை வன்மையாக கண்டிக்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அமித்சா சர்ச்சை பேச்சு:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா, நேற்றைய தினம் அம்பேத்கர் குறித்து பேசியது, பெரிதும் சர்ச்சையானது. அமித்சா தெரிவித்திருந்ததாவது, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என சொல்வது, தற்போது ஃபேசனாகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று மாநிலங்களவையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேசியிருந்தார்.

அமித்சாவின் இந்த  பேச்சானது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்றத்திலும் , எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயர் பதிக்கப்பட்ட பலகையை அணிந்தும் கோசங்கள் எழுப்பினர்.

தவெக விஜய் கண்டனம்:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “ யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்;

அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

Related Post

மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

Posted by - May 2, 2024 0
குக் வித் கோமாளி 5 தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இருந்து…

திருச்சி சிவா, கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல்- தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

Posted by - March 16, 2023 0
திருச்சியில் தி.மு.க கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு எஸ்.பி.ஐ காலணியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் இறகு பந்து மைதானத்தை…

அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை குறையும் பாருங்க.. செம ஜூஸ்

Posted by - November 10, 2023 0
சென்னை: அரசாணிக்காய் இருந்தால் போதும்.. அல்சரை நம்மிடம் அண்டவிடாமல் பாதுகாக்கும்.. அந்த அளவுக்கு நன்மைகளை கொண்டதுதான் இந்த அரசாணிக்காய். அரசாணிக்காயை, பெரும்பாலும் பரங்கிக்காய் என்பார்கள்.. சாம்பல் பூசணி,…

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

Posted by - May 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய…

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கவலைக்கிடம்? ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுக்கு என்னாச்சு?

Posted by - December 14, 2024 0
காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை கவலைக்கிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *