அரசு வேலை கிடைக்காததால் விரக்தி: புதுச்சேரி சட்டசபைக்குள் சான்றிதழ்களை வீசிய விளையாட்டு வீரர் கைது

282 0

புதுச்சேரி:

புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29). பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். அவர் புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார். இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் சத்யராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் சட்ட சபைக்கு வந்தார். சட்டசபை நுழை வாயிலில் நின்று கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை வேலை வழங்கப்படவில்லை என்று கூச்சலிட்டார்SSC, UPSC : இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்புகள் இதோ!

அப்போது சட்டசபை காவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் தனது சான்றிதழ்களை சட்டசபை நுழை வாயிலில் தூக்கி வீசினார். உடனே சபை காவலர்கள் அதனை எடுத்துக்கொடுத்து அங்கிருந்து செல்லும் படி கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராக கூச்சலிட்டார். இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Post

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - October 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

Posted by - August 21, 2023 0
போரூர்: தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை…

ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்; தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Posted by - September 12, 2025 0
TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். TET…

என்னங்க இப்படி சொல்லிடீங்க : இந்தியன் 2வை மோசமாக விமர்சித்த நடிகை ரச்சிதா..!!

Posted by - July 15, 2024 0
கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்று வரும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் இப்படத்தை மோசமாக விமர்சித்துள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தி…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி… ஓபிஎஸ் அறிவிப்பு

Posted by - January 21, 2023 0
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *