இட்லி,தோசைக்கு கத்திரிக்காயை இனி இப்படி துவையல் பண்ணுங்க..

187 0

கத்திரிக்காய் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒருஅற்புதமான காய்கறி. கத்திரிக்காயைக் கொண்டு நாம் பல ரெசிபிக்களை செய்யலாம். இதுவரை கத்திரிக்காய் கொண்டு சாம்பார், சட்னி என்று செய்து சுவைத்திருப்போம்.

ஆனால் கத்திரிக்காயை எள்ளு விதைகளுடன் சேர்த்து கத்திரிக்காய் எள்ளு துவையவை செய்தால் அட்டகாசமாக இருக்கும். இந்த துவையல் இட்லி, தோசை, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்

இனிமேல் இட்லி, தோசைக்கு இப்படி துவையல் செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளோர் 2 இட்லியை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கத்திரிக்காய் எள்ளு துவையல் எப்படி செய்வன்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் எள்ளு துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைத் தெரிங்கள்.இட்லிக்கு தொட்டுக்க அருமையான கத்திரிக்காய் சட்னி - மனிதன்

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் – 500 கிராம்

* தண்ணீர் – 1/4 கப்

வதக்கி அரைப்பதற்கு…

* எள்ளு விதைகள் – 1/4 கப்

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1

தாளிப்பதற்கு…

* நெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் குக்கரில் கத்திரிக்காயைப் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 நிமிடம் கத்திரிக்காயை வேக வைத்து இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து, கத்திரிக்காயின் தோலை நீக்கிவிட வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில் வேக வைத்த கத்திரிக்காயைப் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளைப் போட்டு பொன்னிறமாக குறைவான தீயில் வைத்து வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஈரமில்லாத ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து மிதமான தீயில் வைத்து 6-7 நிமிடம் தக்காளியை நந்கு மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

* அடுத்து அதில் எள்ளு பொடியை சேர்த்து, நெய் ஊற்றி கிளறி இறக்கி, எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதிவ் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து தாளித்து, அதை துவையல் மேல் ஊற்றி, சிறிது எள்ளு விதைகளைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் எள்ளு துவையல் தயார்.

Related Post

1 கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. அருமையான ருசியில் பஞ்சு போல இட்லி சுடலாம்…

Posted by - December 28, 2023 0
காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியலையா? இட்லி சுடலாம் என்றால் இட்லி மாவு இல்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா?…

சாதி வெறி பிடித்தவர்… பெண்களிடம் அத்துமீறல்… திவாகருக்கு ரெட் கார்ட்…

Posted by - November 13, 2025 0
Bigg Boss 9: சக போட்டியாளர் மீது சாதிய ரீதியிலான கருத்துக்களை முன்வைப்பதாலும், பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறுவதாலும் திவாகருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை…

முத்துவை காலி செய்ய நடக்கும் சதி.. பிக்பாஸ் டைட்டிலை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் டிவி

Posted by - January 2, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசன் டைட்டிலை யார் பெற வேண்டும் என்பதையும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் விஜய்…

என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?அது அது அந்த காலம்….

Posted by - February 2, 2024 0
#சிம்_கார்டு_நினைவுகள் : என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..? இதெல்லாம் இப்ப எங்க போச்சு..? ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த சிம்கார்டு…

வார இறுதியை இந்த 10 படங்களோடு கொண்டாடுங்க..

Posted by - August 8, 2024 0
அடுத்த வாரம் தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர இருக்கிறது. அதனாலேயே பிரசாந்த் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் செய்துவிட்டார். அதன்படி நாளை இப்படம் திரைக்கு வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *