இது கூட தெரியாம இருக்கீங்க.. CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்.. வெளுத்து வாங்கிய மக்கள்

251 0

விஜய்

நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் தான், தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

எதிர் குரல்

அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூக நடக்கும் ஓவ்வொரு விஷயத்திற்கும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது CAA சட்டத்திற்கு எதிராக தனது குரலை எழுப்பியுள்ளார்.

” சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA போன்ற சட்டங்கள் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்.

 

இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க ஏற்கனவே தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துவிட்டது. சட்டமன்றத்தில் தமிழகத்தில் CAA கிடையாது என்ற தீர்மானமும் எடுத்துவிட்டது.

ஆனால், விஜய் இப்போது வந்து இதை பற்றி பேசுகிறார். யாரவது அவருக்கு எடுத்து சொல்லுங்க என வெளுத்து வாங்கி வருகிறார்கள். இன்னும் சிலர் ‘விஜய் அமைதியாக இருப்பது நல்லது’ என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

 

 

 

 

Related Post

“கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை… அவர் ஒரு பச்சோந்தி!” – ஈ.பி.எஸ். விமர்சனம்

Posted by - December 9, 2023 0
பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் – எடப்பாடி பழனிசாமி நடிகர் கமல்ஹாசனை அரசியல்வாதியாகவே தான் கருதவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர்…

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியாக உயரும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - November 14, 2023 0
சென்னை: இன்று உலக சர்க்கரை வியாதி தினம். சர்க்கரை வியாதியை பொறுத்தவரை நாள்பட்ட நோய். இது வந்தாலே வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரையோடுதான் வாழ வேண்டிய சூழ்நிலை. இந்த…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *