இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியாக உயரும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

208 0

சென்னை:

இன்று உலக சர்க்கரை வியாதி தினம். சர்க்கரை வியாதியை பொறுத்தவரை நாள்பட்ட நோய். இது வந்தாலே வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரையோடுதான் வாழ வேண்டிய சூழ்நிலை. இந்த வியாதி வந்தால் கண் பார்வையிழப்பு, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த வியாதி வந்தால் கண் பார்வையிழப்பு, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 10 கோடி பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு | India's  diabetes rate up 123% since 1990 - Tamil Oneindiaஇந்த எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யாவிட்டால் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறி உள்ளார்கள்.

இந்திய உணவுகளை பொறுத்தவரை சர்க்கரை, கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளே புழக்கத்தில் உள்ளது. எனவே உணவு விசயத்தில் கவனமும், உணவு கட்டுப்பாடும் அவசியம். உலக அளவில் உறுதி செய்யப்படும் 7 சர்க்கரை வியாதிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்கள்.

19 வயதுக்குட்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கு டைப்-1 வகை சர்க்கரை வியாதி இருக்கிறது. டைப்-1ஐ பொறுத்தவரை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள், கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்துகிறது. இவர்களுக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.

டைப்-2 வகையை பொறுத்தவரை தடுக்க முடியும். அதற்கு சீரான உணவை சாப்பிடுவது, தினமும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆபத்தை வெகுவாக குறைக்கும் என்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் கோவாவில் 26.4 சதவீதமும், புதுவையில் 26.7 சதவீதமும் உள்ளது. தமிழகத்தில் 14.4 சதவீதத்தினரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வாழ்க்கை முறை, உணவு முறையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் சர்க்கரை வியாதி வருவதை கட்டுப்படுத்தும்.

Related Post

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனை: அமைச்சர்கள் + ஊழியர் சங்கங்கள்

Posted by - December 22, 2025 0
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.…

பூனை மீசை .. சிறுநீரகத்தை காக்கும் அற்புத மூலிகை.. சிறுநீரக கற்களை நொறுக்கும் “யானை வாங்கி”.. சபாஷ்

Posted by - December 7, 2023 0
சென்னை: சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் மூலிகைகள் என்னென்ன தெரியுமா? அதில் ஒருசிலவற்றின் நன்மைகளை பார்ப்போம்..!! சிறுநீரகத்தில் வலி இருக்கலாம்.. கற்கள் இருக்கலாம்.. தொற்று இருக்கலாம்.. வீக்கம் இருக்கலாம்..…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… வானிலை மையம் அப்டேட் !

Posted by - May 15, 2024 0
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திண்டுக்கல், தேனி,…

நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Posted by - January 10, 2025 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *