“கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை… அவர் ஒரு பச்சோந்தி!” – ஈ.பி.எஸ். விமர்சனம்

208 0

பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் – எடப்பாடி பழனிசாமி

நடிகர் கமல்ஹாசனை அரசியல்வாதியாகவே தான் கருதவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர் ஒரு பச்சோந்தி என்றும் விமர்சித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடினார். கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும், தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டியதால் தான் பெருவெள்ளம் ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.வெள்ளம் வந்தபிறகு என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை தலைமைச் செயலாளர் கேட்டிருப்பது ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை காட்டுவதாக ஈபிஎஸ் விமர்சித்தார். மேலும் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததாக சொல்லிவிட்டு, தற்போது 50% பணிகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதாக கூறுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.இதனை தொடர்ந்து, வெள்ளப்பாதிப்பு குறித்து அரசை பிறகு விமர்சிக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நடிகர் கமல்ஹாசனை தான் ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை என்றார். எதிர்வரும் நாடாளுமன்றத்தில் திமுக ஆதரவில் எம்.பி. ஆக. கமல் முயற்சிப்பதாக எடப்பாடி விமர்சித்தார். மேலும், பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் என்று கூறிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே இருப்பதாக சாடினார். எனவே, கமல்ஹாசனின் கருத்துக்கு செவி சாய்க்க தேவையில்லை என்று கருதுவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Post

தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை – நூதன போராட்டம்!

Posted by - December 27, 2024 0
“எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்.” தமிழக…

இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

Posted by - April 26, 2025 0
இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம்…

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

Posted by - February 20, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரியானா, குஜராத்,…

மக்களே அலெர்ட்.. இன்று இந்த 17 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..!

Posted by - November 22, 2023 0
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *