இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

185 0

சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகில் உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில், நள்ளிரவில் வீடு புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக வெட்டி, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியில், பொதுமக்கள் உயிர்ப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் கேள்விக்குரியதாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு இதை விடக் கீழ்நிலைக்குச் செல்ல முடியாது என்றிருக்கையில், தினந்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், யாருக்கோ கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

திமுக அரசின் கையாலாகாத்தனத்தால், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஒரு அரசின் அடிப்படைக் கடமையான, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்? என அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

சவுமியா அன்புமணி வெற்றிக்காக உழைக்கும் மகள்கள்!

Posted by - April 10, 2024 0
தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் அம்மாவுக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல் மகளான…

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!

Posted by - December 27, 2024 0
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு எஃப்ஐஆர் இணையத்தில் வெளியான நிலையில், குற்றவாளி பாலியல் வன்கொடுமைக்கு உடன்பட வைத்தது எப்படி என பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக…

“அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா”- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!

Posted by - May 28, 2023 0
25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *