இந்த பிரச்சனை இருப்பவர்கள் அசைவ உணவு சாப்பிடக்கூடாது : மீறினால் உயிருக்கே ஆபத்தா..?

204 0

யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும்.

சிலருக்கு அசைவ உணவுதான் நிறைவைத் தரும். இதற்காக ஞாயிறு வரை காத்திருப்போரும் உண்டு. அதேசமயம் அசைவம் இல்லாமல் உணவே சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் சிலரும் இருக்கிறார்கள். இந்நிலையில் அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு அதிக கேடு என்னும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அளவுக்கு அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவது பல வகையான உடல் நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

அதில் முக்கியமாக அதிக யூரிக் அமிலம் உருவாவதை தூண்டும் என்கின்றனர். இந்த யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும். அதிகப்படியான யூரிக் அமிலம் சுரப்பதை hyperuricemia என்று அழைக்கிறார்கள். இது கீல்வாதம் போன்ற பல வகையான நோய்களை உண்டாக்கும். அப்படி அசைவ உணவு அதிகமாக சாப்பிடுவோருக்கு இரத்ததில் யூரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரிக்கும் என்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அம்ரேந்திர பதக் பேசுகையில் “ யூரிக் அமிலம் என்பது உடலின் கழிவு. இது கல்லீரலில் சுரந்து சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. பின் அது சிறுநீர் வழியாக வெளியேறும். யூரிக் அமிலம் 3 காரணங்களுக்காக அதிகரிக்கும். அதில் முதல் காரணம் மோசமான வாழ்க்கைமுறை, இரண்டாவது சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனையால் அதிகரிக்கும். மூன்றாவது அதிகமாக பியூரின் மற்றும் அசைவ உணவுகளை உட்கொளவதாகும். உங்களுக்கு அதிகமாக யூரிக் அமிலம் சுரக்கிறது எனில் ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படாது” என்று கூறுகிறார்.

யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது சில அறிகுறிகள் தென்படும். அவை..

உடலில் அதிக வலி இருக்கும் அல்லது மூட்டுகளில் வலி இருக்கும்.

மூட்டுகளில் கதகதப்பான உணர்வு இருக்கும்

அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள்

சிறுநீரில் வித்தியாசமான துர்நாற்றம் வீசும். நுரை அதிகமாக இருக்கும்.

குமட்டல் அல்லது வாந்தி வரும்

 

ஏன் அசைவ உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன..?

டாக்டர் அம்ரேந்திர பதக் கூற்றுப்படி அதிகமாக புரோட்டீன் மறும் பியூரின் உணவுகளை உண்டால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக சிவப்பு இறைச்சிகளில் அதிகமாக பியூரின்ஸ் இருப்பதால் யூரிக் அமிலத்தின் உற்பத்தியையும் அதிகரிக்கும். அப்படி பலர் யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சீரான உணவு முறை மூலம் இதை எளிதாக கட்டுப்படுத்த முடியும். ஒருவேளை உங்களுக்கு யூரிக் அமிலம் பிரச்சனையை கண்டறிந்துவிட்டால் ஒரு வாரத்திலேயே எளிதாக குணப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் பதக்.

யூரிக் அமிலத்தின் உற்பத்தியை கட்டுப்படுத்த சில டிப்ஸ் :

அசைவ உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவும்

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறவும்

அதிக இனிப்பு கலந்த பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி, உடல் உழைப்பு அவசியம்

அவ்வப்போது உடல் நலப் பரிசோதனைகளை செய்வதும், ஆரோக்கியத்தை சீராக கடைப்பிடிப்பதும் அவசியம்.

Related Post

மீண்டும் வருகிறதா ஆதி குணசேகரன் கேரக்டர்.. எப்படி இருக்கு எதிர்நீச்சல் சீரியல்… டி.ஆர்.பி. ரேட்டிங் நிலவரம் இதுதான்!

Posted by - September 25, 2023 0
மாரிமுத்துவின் கேரக்டருக்கு சரியான நபர் கிடைத்தால் குணசேகரன் மீண்டும் என்ட்ரி ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்நீச்சல் மெகா தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து…

அவசரப்பட்டு Nothing Phone 2a வாங்கிடாதீங்க..

Posted by - May 25, 2024 0
“என்னது? முதல் நாள் விற்பனையிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சக்கைபோடு போட்ட நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனை வாங்க வேண்டாமா.. ஏன்?”…

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. புரொமோ இதோ

Posted by - July 25, 2025 0
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதாவது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வரும்…

சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ

Posted by - March 23, 2023 0
மகாலட்சுமி தமிழ் சீரியல் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமான முகமாக இருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *