இந்தமுறை கார்.. வாரம் ஒரு சர்ச்சை.. விளம்பரம் தேடுகிறாரா டிடிஎப் வாசன்.? தியேட்டர் வாசலில் நடந்தது என்ன?

224 0

TTF Vasan : நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன்.

சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎப் வாசன். போலீசார் அபராதம் விதித்துள்ள நிலையில், மீண்டும் விளம்பரம் தேடும் முயற்சியா? என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது போலீசாருடன் சர்ச்சையில் சிக்கவில்லை என்றால் தூக்கம் வராது என்பதுபோல.. மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎப் வாசன். நம்பர் பிளேட் இல்லாத காரில் டிடிஎப் பயணித்ததன் பின்னணி என்ன?டிடிஎப் வாசன்

எம். பி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காலேஜ் ரோடு என்ற திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்களில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் லிங்கேஷ் மற்றும் யூடியூபர் டிடிஎப். வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கிற்கு வந்தனர். டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால் அவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவரை காண ரசிகர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கமலா திரையரங்கு வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வழக்கமாக போக்குவரத்து விதிகளை கண்டுகொள்ளாத டிடிஎப் வாசன், வந்திறங்கிய வெள்ளை நிற சொகுசுக் காரில் நம்பர் பிளேட் இல்லை என்பது தெரியவந்தது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால் போக்குவரத்து துறை போலீசார் டிடிஎப் வாசன் வாசன் வந்த காரை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த வாசனுக்கு தகவல் தெரியவர விரைந்து காவல்நிலையத்திற்கு சென்றார்.அங்கு வாசனிடம் காவல் துறையினர் விசாரித்தபோது, அந்த கார் தன்னுடையது அல்ல என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார்.

ஆவணங்களை ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி வந்துள்ளனர் என்பது. நம்பர் பிளேட் இல்லாம காரை எடுத்து வந்ததற்கு 500 ரூபாயும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதற்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Related Post

உங்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப இரும்புசத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு… உடனே இத சாப்பிடுங்க!

Posted by - October 25, 2023 0
நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும், நம் உடலின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இரும்புசத்து நம் உடலுக்கு மிகவும் அவசியமான…

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்

Posted by - May 5, 2023 0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி…

நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

Posted by - March 15, 2023 0
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார். 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு…

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்!

Posted by - May 25, 2023 0
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5…

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

Posted by - June 30, 2025 0
மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *