இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

208 0

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. பணி நீக்க நடவடிக்கைகள் இந்தியாவில் இருக்காது என்றாலும், டிசம்பர் மாதத்தில் அதிகரித்து, பின்னர் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் தற்போது அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

டிசம்பர் மாதத்தில் 8.30 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், இந்தாண்டு ஜனவரியில் 7.14 சதவிகிதமாகக் குறைந்தது. பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக அதிகரித்த நிலையில், மார்ச் மாதத்தில் 7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 26.8 சதவிகிதமாகவும், குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.8 சதவிகிதமாகவும், புதுச்சேரியில் 1.5 சதவிகிதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது.

பண்டிகை காலத்திற்குப் பிறகு, சில்லறை விற்பனை, விநியோகம், நிதி சேவை உள்ளிட்ட துறைகளில் பணியாளர்களுக்கான தேவை குறைந்ததே, வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. ஐ.டி. துறையில் புதிய வேலைவாய்ப்பு உருவாகாததும், தேர்வுக் காலம் என்பதால் சுற்றுலாத் துறை தொய்வு அடைந்திருப்பதும், மற்ற காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

ஆனால், உட்கட்டமைப்பு, பொறியியல், கட்டுமானத் துறைகள் காரணமாகவே ஓரளவு வேலைவாய்ப்பு உருவாகி வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, விரைவில் இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வர அதிக வாய்ப்புள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாகும் என துறை சார்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Post

வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

Posted by - December 27, 2022 0
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சீனாவில் கொரோனா BF.7 வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் அதுதொடர்பான…

கேரளாவில் 6 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை…

Posted by - June 9, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள்…

இந்த போன்லலாம்…WhatsApp செயல்படாதாம்…எந்தெந்த மொபைல்னு பாத்துக்கோங்க…!

Posted by - December 14, 2024 0
WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு  ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு…

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கோலாகலம்: பக்தர்களுக்கு மகா லகு தரிசனம்

Posted by - February 17, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *