இபிஎஸ் சொன்ன பிரம்மாண்ட கட்சி.. அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய்! பாஜக-வுக்கு கல்தாவா?

203 0

எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்தில் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறிய பிரம்மாண்டமான கட்சி நடிகர் விஜய்யின் தவெக என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்தை நோக்கி அரசியல் கட்சிகள் தங்களது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைத்துவிட தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

எடப்பாடி சொன்ன பிரம்மாண்ட கட்சி:

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக என மிகப்பெரிய படை பட்டாளமே உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக ஆகிய கட்சிகளே உள்ளன. இதில் வட தமிழகத்தில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட பாமக-வும் அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் சண்டையால் பிளவுபட்டு உள்ளது. பாஜக-விற்கு எதிரான மனநிலை தமிழகத்தில் உள்ளது.

இந்த சூழலில், கூட்டணியை வலுப்படுத்தினால் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியம் என்பதை எடப்பாடி பழனிசாமி நன்றாக அறிந்துள்ளார். நேற்று தனது சுற்றுப்பயணத்தின்போது, ஸ்டாலின் அவர்களே.. பிரம்மாண்டமான கட்சி ஒன்று எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. நினைச்சுக்கூட பாக்க முடியாத கட்சி என்று பேசியுள்ளார்.

அதிமுக கூட்டணிக்குள் விஜய்யா?

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சால் தமிழக அரசியல் இன்னும் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு உள்ளே போகப்போகும் பிரம்மாண்ட கட்சி யார்? என்பதே தற்போது அனைவரது கேள்வியாக எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமே அந்த கட்சி என்றே தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்  விஜய் கட்சி தொடங்கியது முதலே தங்களது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். மேலும், திமுகவையும், பாஜகவையும் மட்டுமே தனது அரசியல் களத்திலும், பேச்சிலும் விஜய் விமர்சித்து வருகிறார். அதிமுகவை விஜய் விமர்சிக்க மறுப்பது ஏன்? என்ற கேள்வி தொடக்கம் முதலே இருந்து வருகிறது.

அப்போ பாஜகவிற்கு கல்தாவா?

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கூட பார்க்க முடியாத கட்சி என்று கூறியிருப்பதன் மூலமாக அது விஜய் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், பாஜகவை தொடர்ந்து விமர்சிக்கும் விஜய் பாஜக இருக்கும் வரை கூட்டணிக்குள் வருவாரா? என்ற கேள்வியே அனைவர் முன்பும் எழுந்துள்ளது. அதேசமயம் ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா தொடர்ந்து பேசி வருவது பாஜக மீது அதிமுகவினர் மத்தியில் தொடர்ந்து அதிருப்தியை உண்டாக்கி வருகிறது.

இதனால், பாஜக-வை கழட்டிவிட்டு கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தையே மறைமுகமாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுக கூட்டணிக்குள் விஜய் வந்தாலும் முதலமைச்சர் பதவியை குறிவைத்துள்ள விஜய் அதை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுத்தருவாரா? துணை முதலமைச்சர் பதவியை அவருக்கு எடப்பாடி பழனிசாமி தருவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வாக்கு வங்கி:

இதனால், விரைவில் பாஜக கூட்டணிக்கு கல்தா கொடுத்துவிட்டு அதிமுக கூட்டணியில் விஜய்யை எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார் என்று கருதப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய்க்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்ற தலைவர்களை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கூட்டணிக்குள் வந்தால் அவர்களின் வாக்குகள், பெண்களின் வாக்குகள் அதிமுக-விற்கு விழும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Post

TVK கட்சி கொடிக்கு எதிராக கிளம்பிய பஞ்சாயத்து.. தேசிய கட்சி வைத்த செக், தளபதியின் ரியாக்சன் என்ன.?

Posted by - August 23, 2024 0
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார் விஜய். சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும்…

திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? – விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

Posted by - December 7, 2024 0
சினிமாவில் கால் வைப்பது வேறு அரசியல் களத்தில் கால் வைப்பது வேறு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா…

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Posted by - October 6, 2025 0
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப்…

“விஜய் வேடிக்கை மட்டும் பார்த்தால் எப்படி?”

Posted by - December 17, 2025 0
புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய்…

விஜய் உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னாரா? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

Posted by - March 31, 2026 0
திமுக சின்னம் உதய சூரியனுக்கு ஓட்டுப்போடச் சொன்ன தவெக விஜய்? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன? தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தில் உதய சூரியனுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *