இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை கிடைக்குமா..? இன்று தெரிந்துவிடும்..!

224 0
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வசதியாக, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதிகளிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.

வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இன்று முறையிடுமாறு கூறினர். இதன்படி, நீதிபதிகள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று முறையிட உள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாளுக்குள் தீர்ப்பு வழங்க முடியாவிட்டால், நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளனர். இதனால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Post

போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்.. பந்தயத்துக்கு நாங்க வரலாமா, TVKForTN

Posted by - February 22, 2025 0
சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும்  கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது. திமுக கட்சியினருக்கு…

அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!

Posted by - October 16, 2024 0
தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினர்.   தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27ம்தேதி மாலை…

கிருஷ்ணாவின் போதைப்பொருள் பரிசோதனை ரிசல்ட் வெளிவந்தது, திடீர் திருப்பம்

Posted by - June 26, 2025 0
ஸ்ரீகாந்த் நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். ஆனால் இவர் போதைப் பொருள் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் கைதானார். படம்…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி… ஓபிஎஸ் அறிவிப்பு

Posted by - January 21, 2023 0
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்…

கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்: 10-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Posted by - February 16, 2023 0
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பாதிப்படைந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ஐகோர்ட்டை நாடினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *