இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

126 0

தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார்.

சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை, அதிமுகவினர் சிறையிலிருந்து வெளியே வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என்றார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

அதிமுகவினர் பனங்காட்டு நரி

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து நேற்று மதுரை மாநகர் அதிமுக சார்பில் செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில் ” உங்கள் அப்பனையே பார்த்தவர்கள், கலைஞரின் அடக்குமுறையை எதிர்த்து போராடி 31 ஆண்டுகள் நல்லாட்சியை தமிழக மக்களுக்கு அளித்துள்ளோம், அதிமுகவினர் பனங்காட்டு நரி, யாருக்கும் அஞ்ச மாட்டோம்.

செல்லூர் ராஜூ கைது

தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். அதிமுக ஆட்சியில் 24,000 போராட்டங்கள் நடந்துள்ளன.  அதிமுக ஆட்சியில் இருந்த சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கே போனார்கள்? அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்த நடிகர் சூர்யா எங்கே சென்றார்? திமுக ஆட்சிக்கு எப்போது வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி சொன்ன “சார்” என்பவர் யார்?, “சார்” எனும் நபரை காப்பற்ற திமுக அரசு கபட நாடகம் நடத்துகிறது” என பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து  அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகளின் மக்களை சந்திப்பது ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போல இருக்கும் என மதுரையில் செல்லூர் ராஜு விமர்சனம்

 செல்லூர் ராஜூ உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில்…,” “மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு அதிமுகவினர் அகிம்சை வழியில் போராடினோம், ஆனால் காவல்துறை எங்களை குற்றவாளிகளை போல கைது செய்தது. அதிமுகவின் எழுச்சியை கட்டுப்படுத்தும் விதமாக திமுக அரசு மாணவிக்கு நீதி கேட்ட அதிமுகவினரை கைது செய்திருக்கிறதுழ் திமுக அரசின் கைது நடவடிக்கைக்கு அதிமுக என்றும் பயப்படாது.

திமுக கூட்டணி கட்சிகள் அடிமைக்கும் அடிமையாக செயல்படுகிறது

தமிழக மக்களுக்கு உண்மையான விடியலை தருவதற்காக அதிமுக களப்பணிகளை செய்து வருகிறது.
பல்கலைக்கழக மாணவிக்காக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை தானே வருத்திக்கொண்டு போராடி உள்ளார். தன்னை வருத்திக் கொண்டு போராடிய அண்ணாமலையின் போராட்டம் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை திமுக கூட்டணி கட்சிகள் அடிமைக்கும் அடிமையாக செயல்படுகிறது. மாணவிக்காக சிபிஎம் கட்சியின் அறிக்கை தவிர திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் மக்களை சந்திப்பது ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போல இருக்கும்.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மது விற்பனையில் 15 சதவீதம் கமிஷன் தொகை  கொடுக்க வேண்டும் என எழுதப்படாத சட்டம் உள்ளது. ஒரு கோடி மது விற்பனைக்கு 15 இலட்ச ரூபாய் கமிஷன் தொகை தர வேண்டும். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை, அதிமுகவினர் சிறையிலிருந்து வெளியே வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள்” என பேசினார்.

Related Post

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

2026 சட்டமன்ற தேர்தல்: நிறங்கள் அடிப்படையில் தொகுதி பிரிப்பு.. திமுகவின் புதிய வியூகங்கள்

Posted by - June 19, 2025 0
திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும்…

பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

Posted by - January 1, 2026 0
2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள். குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம…

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? – பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

Posted by - March 19, 2026 0
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்…

தினமும் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

Posted by - November 2, 2023 0
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *