இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்- பதற வைக்கும் வீடியோ காட்சி

255 0

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.கடும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்கள்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ -  மனிதன்

தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடமான பர்வானூ என்ற பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில்அடித்து செல்லப்பட்டன. இதன் வீடியோ வைரலாகி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கனமழையால் தெருக்கள் பொங்கி வழியும் நீர்வழிப்பாதைகளாக மாறிவிட்டன. பாலங்கள் அடித்துச் செல்லபட்டு, சாலைகள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. இதனால், அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். நிலச்சரிவு மற்றும் பல இடங்களில் வெள்ளம் காரணமாக சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சிம்லா-கின்னூர் சாலையும் சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதால் வாகனப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது. அரசு அறிக்கையின்படி, இழப்பு மதிப்பீடு நடந்து வருவதாகவும், அது ரூ.3,000-4000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று முதல் கனமழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Post

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

Posted by - September 13, 2023 0
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன்…

BSNL வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய IFTV திட்டம் – 600+ Live TV சேனல்கள், 75 Mbps இணைய வேகம்!

Posted by - December 15, 2025 0
BSNL (Bharat Sanchar Nigam Limited) தனது FTTH (Fiber To The Home) வாடிக்கையாளர்களுக்காக IFTV (Intranet Fiber TV) என்ற புதிய வசதியை அறிமுகம்…

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

இந்தியாவில் மேலும் 156 பேருக்கு கொரோனா- புதிய உயிரிழப்பு இல்லை

Posted by - February 17, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 126 ஆக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *