திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

239 0

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீண்டும் கைது! கிறிஸ்தவ மதத்தை  அவமதித்ததாக அதிரடி | Kanal Kannan arrested by Kanyakumari Cyber Crime  police after posting defamatory ...

இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பான புகாரில் கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Post

இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Posted by - January 27, 2024 0
சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள திரையரங்க வாசலில் 3…

ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

Posted by - May 22, 2025 0
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…

ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

Posted by - December 30, 2024 0
பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023 0
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *