‘இலங்கை அணியின் மிகப்பெரும் சொத்து மதீஷா பதிரனா…’ – தோனி பாராட்டு

396 0

பதிரனா டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து விட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை அணியின் மிகப்பெரும் சொத்தாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா இருப்பார் என்று கேப்டன் தோனி கூறியுள்ளார். இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனா ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவரது பந்துவீச்சில் ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் பலரும் திணறி வருவதை பார்க்க முடிகிறது.

மும்பை அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பதிரனா 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இதன்பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது- மிக துல்லியமாக விளையாடும் பேட்ஸ்மேன்களை தவிர்த்து மற்றவர்கள் பதிரனா பந்துவீச்சில் தடுமாறுகின்றனர். இதற்கு பதிரனா வேகமாக வீசுகிறார் என்று மட்டுமே சொல்ல முடியாது. அவரது தொடர்ச்சியான சிறந்த பந்துவீச்சே இதற்கு காரணம். அவர் டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து விட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை அணியின் மிகப்பெரும் சொத்தாக பதிரனா இருப்பார். கடந்த சீசனில் குறைந்த போட்டிகளில் அவர் விளையாடினார். இந்த தொடரில் அவர் மிக சிறப்பாக பந்துவீசுவதை பார்க்க முடிகிறது. இன்றைய ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கடந்த சில போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் இன்றைக்கு நாங்கள் வெற்றி பெற்ற அணியில் இருப்பதை எண்ணி மகிர்ச்சி கொள்கிறோம். டாஸ் வென்றால் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் மழையை கவனத்தில் கொண்டு பந்து வீச தீர்மானித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா சாதனை

Posted by - December 8, 2022 0
இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என…

CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு

Posted by - November 15, 2025 0
CSK Trade: சஞ்சு சாம்சனிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. CSK Trade: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக…

அகமதாபாத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வெதர் மேன் சொன்ன வானிலை தகவலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - May 29, 2023 0
16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரங்கள் கூறும் நிலையில் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 16-ஆவது ஐபிஎல்…

நீங்களே இப்படி பண்ணலாமா.. போட்டிக்கு நடுவே காவ்யா மாறன் எடுத்த முடிவு.. இத கவனிச்சீங்களா..

Posted by - May 27, 2024 0
17 வது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்த நிலையில் இந்த போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக…

தோனிக்கு கிஃப்ட் கன்பார்ம் ……

Posted by - April 12, 2023 0
சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *