எங்களால் இன்னும் 6 மாதங்களுக்கு போரை தீவிரமாக நடத்த முடியும்: ஈரான் அறிவிப்பு

132 0

தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரியாத்தை நோக்கிச் சென்ற ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக சவூதி அரேபியா தெரிவித்தது. மேலும், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ஈரான் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைகள் முஹாரக் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக கட்டிடத்தின் மீது விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்ததாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், தெஹ்ரானின் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கை அமெரிக்காவும், இஸ்ரேலும் சனிக்கிழமையன்று தாக்கியதாக ஈரான் குற்றம் சாட்டியது. பங்குச் சந்தைகள் சரிந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பின் மீதான முதல் தாக்குதலாக இது கூறப்படுகிறது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையில் உள்ள முக்கிய தளபதிகளை குறிவைத்து, பெய்ரூட்டின் ஒரு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் துல்லியமான தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ராணுவம், இன்று (மார்ச் 8) ஈரான் முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியது. லெபனானின் சுகாதார அமைச்சகம், ஹோட்டலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான போரில் ‘நாங்கள் முழு பலத்துடன்’ தொடர்ந்து ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளார்,

இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல்படை இன்று (மார்ச் 8) தங்களால் தற்போதைய சண்டை வேகத்தில் ஆறு மாதங்களுக்கு தீவிரமான போரை நடத்த முடியும் என்று கூறியது. ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, “ஈரான் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது, ஆனால் வரும் நாட்களில் மேம்பட்ட மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தும்” என்றார்.

Related Post

Extra-Marital Affair | பெண்கள் ஏன் திருமணத்தை கடந்த உறவைத் தேர்வு செய்கிறார்கள்? – 5 காரணங்கள்.!

Posted by - December 3, 2022 0
தன் கணவருடன் பாலியல் உறவு மிக மிக கொடுமையாக இருந்ததுதான் ஒரே காரணம் என்று ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். பல முறை முயற்சி செய்தும் கூட, அந்த…

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

Posted by - March 1, 2023 0
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில்…

என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்…

Posted by - May 7, 2025 0
இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியாவின் பிஐபி(PIB) மறுத்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது…

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்

Posted by - May 7, 2025 0
தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில் பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்த கருத்துக்கு, அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரே ஃபேக்ட் செக் செய்து அவரது மூக்கை உடைத்த சம்பவம்…

மெக்சிகோவில் 122 டிகிரி வெயில்- வெப்ப அலை தாக்கி 100 பேர் பலி

Posted by - June 30, 2023 0
மெக்சிகோ: மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 3 வாரங்களாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *