என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்…

288 0

இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியாவின் பிஐபி(PIB) மறுத்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கி அழித்ததாக பகிரப்பட்டுவரும் செய்தியுடன் கூடிய வீடியோ போலியானது என பிஐபி(PIB) ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்கியதாக வெளியான வீடியோ

நள்ளிரவு தாக்குதல் மூலம், இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய படைத் தலைமையகத்தையும் பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக, பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், “இந்தியா, அப்பாவி பாகிஸ்தானியர்களை கொல்ல உங்கள் ஃபைட்டர் ஜெட்டுகள் கிளம்பிய ஸ்ரீநகர் ராணுவ தளம் அழிக்கப்பட்டது. உண்மையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது.. உங்கள் ஆக்ரோஷத்திற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.. பாகிஸ்தான் ஜிந்தாபாத்“ என்று அந்த பதிவில் கூறப்பட்டு, ஒரு வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

 

உண்மையை கண்டறிந்த இந்தியாவின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ(PIB)

இதையடுத்து, இந்த பதிவு குறித்த உண்மை சோதனை நடத்திய இந்திய அரசின் பிஐபி(Press Information Bureau), அந்த வீடியோ இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தானது அல்ல என்றும், 2024-ல் பாகிஸ்தானின் கைபர் பக்த்துன்க்வாவில் நடந்த மத மோதலின்போது எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளது. அந்த வீடியோ, தற்போது நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளின்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும், இதுபோன்ற பதற்றமான சூழல்களின்போது, இதுபோன் போலியான பதிவுகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிஐபி அறிவுறுத்தியுள்ளது.

 

Related Post

நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?

Posted by - July 6, 2023 0
நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும்…
image 5

எங்களால் இன்னும் 6 மாதங்களுக்கு போரை தீவிரமாக நடத்த முடியும்: ஈரான் அறிவிப்பு

Posted by - March 8, 2026 0
தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல்…

Breaking News….

Posted by - April 12, 2022 0
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் கரோனா உயிரிழப்புகளை விட அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Extra-Marital Affair | பெண்கள் ஏன் திருமணத்தை கடந்த உறவைத் தேர்வு செய்கிறார்கள்? – 5 காரணங்கள்.!

Posted by - December 3, 2022 0
தன் கணவருடன் பாலியல் உறவு மிக மிக கொடுமையாக இருந்ததுதான் ஒரே காரணம் என்று ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். பல முறை முயற்சி செய்தும் கூட, அந்த…

ஆங்கிலப் புத்தாண்டு: முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

Posted by - December 31, 2023 0
சென்னை: உலகம் முழுவதும் நாளை (ஜன.1) ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: புதிய சிந்தனை, புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *